நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவகம் (ACCIMT)
நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவகத்தின் (ACCIMT) பிரதான செயற்பாடு இலங்கையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இயக்குவதும் நவீன தொழில்நுட்ப துறையில் எதிர்கால ஆய்வுகளை மேம்படுத்துவதுமாகும். இதில் தொடர்பாடல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், இலத்திரனியல், விண்வெளி தொழில்நுட்பம், ரோபோ தொழில்நுட்பம், ஒளிப்படவியல் மற்றும் புதிய உபகரணங்கள் என்பவை உள்ளடங்குகின்றன.
தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் (NERDC)
தேசிய பொறியியல் ஆராய்ச்சி நிலையம் (NERDC) நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் பிரதான பகுதிகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (ஆ.அ) நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இதில் குறைந்த செலவு கட்டிட நிர்மாணம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பாதுகாப்பான குடிநீர், உயிர்வாயு வலுசக்தி பயன்பாடு, வலுசக்தியும் சூழலியலும், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்றவை இதில் அடங்குகின்றன. தே பொ ஆ அபி நிலையத்தின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள், நிர்மாண பணியில் அதிகரித்த செலவுகள், வலுசக்தி நெருக்கடிகள், கிராமிய பிரதேசங்களில் உட்கட்டமைப்பு போதாமை, போக்குவரத்தின்போது உணவுப் பொருட்கள் வீணாதல், சூழலியல் பிரச்சினைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கியிரு;க்கின்றது.
தேசிய அடிப்படை கற்கைளுக்கான நிறுவனம் (NIFS)
தேசிய அடிப்படை கற்கைகளுக்கான நிறுவனம் (NIFS), அடிப்படை ஆராய்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு முன்னணி நிறுவனமாகும். அடிப்படை கற்கை நிறுவனத்தின் 1981ஆம் ஆண்டின் 55ஆம் இலக்க சட்டம், 2014ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டது. அதில் ஆராய்ச்சியை நடத்துதல், மேம்படுத்துதல், முன்னெடுத்தல் என்பவை பிரதான நோக்கங்களாக இருந்தன. அத்துடன் மூல புலனாய்வில் அடிப்படை கற்கைகள் பொதுவானவையாக இருந்தன. மேலும் கற்கைக்குப் பொருத்தமான பயன்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் கூட்டிணைதலும் அதன் நோக்கமாகும்.
தேசிய ஆராய்ச்சி மன்றம் (NRC)
தேசிய ஆராய்ச்சி மன்றமானது (NRC) ஜனாதிபதி அவர்களால் 2007ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இதன் நோக்கம், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சிகளைத் திட்டமிடுவதற்கு, இணைப்பாக்கம் செய்வதற்கு, வசதிப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு உதவுவதாகும். இதன்மூலம் ஆகக்கூடிய பயனைப் பெறுவதற்கு வலுவான தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதும் அதன் நோக்கமாகும். தேசிய ஆராய்ச்சி பேரவையின் பொதுவான எண்ணக்கரு உலகரீதியில் முன்னேற்றமடைகின்ற விஞ்ஞானத்திற்குப் பெறுமதியான பங்களிப்புகளைச்செய்கின்ற அதேவேளையில் விசேடமாக நாட்டுக்கு முக்கியமான ஆராய்ச்சிகளை நடாத்துவதற்கு விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதாகும். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியுடன் சம்பந்தப்பட்ட நிதி முகாமைத்துவம் மற்றும் நிர்வாக என்பவற்றில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஒரு முக்கியமான பொறிமுறையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் 2016ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட ஒரு சட்டத்தின் ஊடாக அதாவது 2016ஆம் ஆண்டு 11ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தற்போது தேசிய ஆராய்ச்சி பேரவை நியதிச்சட்ட நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்டது.
தேசிய விஞ்ஞான மன்றம் (NSF)
தேசிய விஞ்ஞான மன்றம் (NSF) 1994ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி சட்டத்தினால் 1998ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இது இலங்கையின் இயற்கை வளங்கள், வலுசக்தி, மற்றும் விஞ்ஞான அதிகாரசபைக்கு (NARESA) பின்னுரிமையாளராக 2013ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க சட்டத்தின்மூலம் திருத்தப்பட்டது. தேசிய விஞ்ஞான மன்றத்தின் செயற்பணி நிதியிடல், அறிவு, உருவாக்கம், திறன்விருத்தி, பங்குதாரர், தகவல்களைப் பரப்புதல் மற்றும் விஞ்ஞானத்தைப் பிரபல்யப்படுத்துதல் என்பவற்றின் ஊடாக தொழில்நுட்பத்தை மாற்றீடு செய்வதற்கும் மற்றும் ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் புத்தாக்கம் என்பவற்றிற்கு வசதிகளை ஏற்படுத்துதல், உதவிசெய்தல் என்பவற்றை முன்னெடுப்பதாகும்.
இலங்கை புத்தாக்குநர்கள் ஆணைக்குழு (SLIC)
இலங்கை புத்தாக்குநர்கள் ஆணைக்குழு (SLIC) ஒரு நியதிச்சட்ட நிறுவனமாகும். இது 1979ஆம் ஆண்டின் 53ஆம் இலக்க இலங்கை புத்தாக்குநர்கள் ஊக்குவிப்பு சட்டத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு இலங்கை புத்தாக்கங்களையும் அவர்களின் வர்த்தகமயப்படுத்தல்களையும் ஊக்குவிக்கின்ற மற்றும் மேம்படுத்துகின்ற நோக்கத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.