சுரங்க நாணயக்கார
சுரங்க நாணயக்கார 1981ஆம் ஆண்டுபிறந்தார். கொழும்பு றோயல் கல்லூரியில் இரண்டாம் நிலை கல்வி கற்ற இவர், சிங்கப்பூர் தேசிய பல்லைக்கழகத்தில் மின்சார மற்றும் கணினி பொறியியலில் இளமானி பட்டம் பெற்றார். சிங்கப்பூர் தேசிய பல்லைக்கழகத்தில் பொறியியலில் PhD பட்டம் பெற்றுள்ளார். மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சுரங்க அரையாண்டுகள் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்திலும் அரையாண்டுகள் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் கழித்தார். பின்னர் அவர் MIT Media ஆய்வுகூடத்தில் Pattie Maes’s Fluid Interfaces குழுவில் கலாநிதி பட்டப்பின்படிப்பு ஆராய்ச்சியாளராக இருந்தார்.
2014ஆம் ஆண்டு மனித வளர்ச்சி ஆய்வுகூடத்தின் தலைவராக இருந்ததோடு சிங்கப்பூர் தொழ்ல்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியாக இருந்தார். கண்வளையம் மற்றும் ஹெப்டிக் கதிரை ஆகியவை பற்றி பணிகளில் அவர் புகழ்பெற்றிருந்தார். அவருடைய ஆராய்ச்சியில் தேய்வடையும் கணினி செயற்பாடு, உதவும் தொழில்நுட்பம், எங்குமிருக்கும் கணிப்பீடு, AI, கூட்டு புலமை மற்றும் மனித எந்திரவியல் செயல்கள் என்பவை உள்ளடங்குகின்றன. MIT தொழில்நுட்ப மீளாய்வில் 2014ஆம் ஆண்டு ஆசிய பிராந்தியத்தில் 35 வயதுக்குக் கீழ்பட்ட புத்தாக்குநர்களில் நாணயக்காரவும் ஒருவராக கௌரவிக்கப்பட்டார்.
சுரங்க அவருடைய கண்வளைய பணிகளில் புகழ்பெற்றிருந்தார் (ஹெப்டிக் கதிரை குறுக்கீடுகளுக்காக விரலில் அணியும் தொடர்புகள்) செவிப்புலனற்றவர்களுக்கும் மிகச் சிறந்த இசை அனுபவத்தை வழங்குவதற்கான கட்புல செவிப்புல கருவி மற்றும் ஒலியை அடிப்படையாகக் கொண்ட காதில் ஒட்டும் கருவியை அன்றாட வாழ்வுக்கான தேவைகளை இலகுவாக அடைவதற்கான பணிகளிலும் புகழ் பெற்றிருந்தார். அவருடைய ஏனைய பணிகளுக்கிடையில் சுரங்க SPARSH என்பதைக் கண்டுபிடித்தார். இது டிஜிட்டல் கருவிகளுக்கிடையில் பிரதி பண்ணி ஒட்டும் வழிமுறையாகும். விரல் வரைவு - அதாவது இயற்கையிலிருந்து வர்ணத்தைப் பிரித்தெடுத்து டிஜிட்டல் சித்திரங்களில் கொண்டுவருதல்.
ரங்க டயஸ்
ரங்க டயஸ் தற்போது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியல் திணைக்களத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கின்றார். அவருடைய ஆராய்ச்சியானது ஆகக்கூடிய அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலைகளின் கீழ் சக்திச்சொட்டு தொடர்பாக கவனம் செலுத்தப்படுகின்றது. குறிப்பாக, உயர் Tc மீ கடத்துதிறன், காந்தசக்தி மற்றும் சக்திச்சொட்டு நிலைமாற்றம் அதிகமாக இருத்தல் என்பவற்றில் கவனம் செலுத்துகிறது. அவருடைய பிரதான பங்களிப்பில் திண்ம உலோக நீரியலின் கண்டெடுப்பு உள்ளடங்குகிறது. உயர்ந்த அளவில் ஒடுக்கப்பட்ட சடத்துவ 80 வருடங்களுக்கு மேலாக பௌதிகவியலாளர்கள் அடைவதற்கு கடும் முயற்சி செய்தவை, (உயர்வாக நடத்துகின்ற உலோக மற்றும் சிறப்பா நடத்துகின்ற பொலிமர் கலப்பு குறிப்பாக நராக அமைந்துள்ள, உயர் செறிவு திண்ம CO2-V, துண்டித்தல் - மீள இணைத்தல நடைமுறைகள் (DISREC) முதல் அவதானிப்பு, நீரியல் இடைவரு செறிவுகளில் தென்படுகின்ற புதிய கண்டுபிடிப்புகள் என்பன உள்ளடங்குகின்றன). அவருடைய பணிகள் புகழ்பெற்ற பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. உதாரணமாக நியுயோர்க் டைம்ஸ், BBC, NBC, NPR, New Scientist, Chemistry World, ScienceNews, Nature news and views, APS physics central என்பவையாகும்.
மஞ்சு குணவர்தன
மஞ்சு குணவர்தன மாத்தறையைச் சேர்ந்தவர். அவர் கொழும்பு மகாநாம கல்லூரி, றோயல் கல்லூரி என்பவற்றின் மாணவராவார். அவர் ஐக்கிய இராச்சியத்தின் பொறியியல் பேரவையில் ஆரம்ப பொறியியல் கல்வியைப் பெற்றார். பட்டப்பின்படிப்பு தகைமைய டெக்சார்ஸ் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். ரேதியொன் விண்வெளி ஆராய்ச்சியின் விசேட திட்டத்தில் தகைமை பெற்றார்.
அவருக்கு புத்தாக்கம், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் ஆராய்ச்சி என்பவற்றில் 25 வருட அனுபவம் உண்டு. ஜெனிவாவில் நடைபெற்ற 42வது சர்வதேச புத்தாக்க காங்கிரசில் 2 தங்கப் பதக்கங்களை வென்றார். ஜெனிவாவில் நடைபெற்ற 41வது சர்வதேச புத்தாக்க காங்கிரசில் 1 தங்கப் பதக்கத்தையும் 1 வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். 1990ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்ற அவ்வருடத்தின் இளம் புத்தாக்குநராவார்.
அவர் இலங்கை நெனோ தொழில்நுட்ப நிறுவகத்தின் நெனோ தொழில்நுட்ப பயன்பாடுகள் ஆலோசகராக (SLINTEC) இருக்கின்றார். அத்துடன், வரையறுக்கப்பட்ட ஹைபிரிட் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானியாக/பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருக்கின்றார்.
ரகித்தா மலேவன
ரகித்தா மலேவன இலங்கை புத்தாக்குநர், விஞ்ஞானி, விஞ்ஞான ஆராய்ச்சியாளர் மற்றும் இளம் செயற்பாட்டாளர். இவர் பிரதானமாக மருத்துவ மற்றும் உயிரியல் மூலக்கூறு ஆராய்ச்சியில் பணிபுரிகிறார். ரகித்தா எச்ஐவி/எயிட்ஸ் மற்றும் லியுகேமியா என்பவற்றுக்கான நோய்நீக்கியை வெற்றிகரமாக விருத்திசெய்தமைக்காக விருது பெற்றவராவார். உயர் கல்வி மாணவராக இருந்தபோதே இதை செயற்படுத்தியிருந்தார். இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சனாதிபதி அவர்களிடமிருந்து அவருடைய மாபெரும் சாதனைகளுக்காக விசேட பாராட்டு கிடைத்தது. 2016ஆம் ஆண்டு எச்ஐவி/எயிட்ஸ் தொற்றியுள்ள சமூகத்திற்காக அவர் ஆற்றிய சமூக சேவையைக் கௌரவிக்குமுகமாக றோயல் பொதுநலவாய சங்கம் இளம் தலைவர்களுக்கான மகாராணியின் கௌரவ விருதுக்கு வெற்றியாளராக அவரைப் பிரகடனப்படுத்தியது.
ரகித்தா அவருடைய மருத்துவ ஆராயச்சியை கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம், இலங்கை தேசிய விஞ்ஞான மன்றம், சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து மேற்கொண்டார்.
2015ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் ஜகார்த்தா நகரத்தில் நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி ஒலிம்பியாட் 2015 நிகழ்வில் எச்ஐவி/எயிட்ஸ் பற்றி அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு தங்கப் பதக்கம் வென்றார். அதே வருடம் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சூழலியல் நிலைபேறான ஒலிம்பியாட் 2015 நிகழ்வில் அவர் இன்னுமொரு தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். அந்த பதக்கங்களுடன் சர்வதேச களத்தில் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது இலங்கையர் இவராவார்.
மனித இரத்தப்புற்று கலங்களுக்கு மருத்துவ செயற்பாட்டுக்கு மருந்தாக நெனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுபற்றிய ஆராய்ச்சிக்கு 2014ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் ஜகார்த்தா நகரத்தில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான கருத்திட்ட ஒலிம்பியாட் 2014 நிகழ்வில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2012ஆம் ஆண்டு ரகித்தா நீர்பாசனத்திற்கான நீரைச் சேமித்து வைப்பதற்கு புதிய வழியொன்றைக் கண்டுபிடித்தார். (எளிதாக்கப்பட்ட மற்றும் குறைந்த செலவு கள கொள்ளளவு பரிசோதனை கருவி) அதற்கு ஸ்டொக்ஹொம் இளையோர் நீர் பரிசு தேசிய போட்டியில் தகுதிவாய்ந்த நன்மதிப்பு விருதை வென்றார். ரகித்தா உயர் கல்வி கற்கும் காலத்தில் சில மருத்துவ வெளியீடுகளை படைத்துள்ளார்.
தினேஸ் கட்டுகம்பல
தினேஸ் கட்டுகம்பல போமிரிய தேசிய பாடசாலையிலும் டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியிலும் கல்வி கற்றார். அவருடை மிகவும் குறிப்பிடத்தக்க புத்தாக்கம் அரை வட்ட மானியாகும் - இது ஓர் உருளையின் அல்லது வளைவின் அரை வட்டத்தை கண்டறிவதற்கான கருவியாகும். இந்த கருவியை இவர் 2008ஆம் ஆண்டு மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பொறியியல் தொழில்நுட்பம் கற்கின்றபோது தேசிய டிப்ளோமா தொழில்நுட்பத்தில் (NDT) ஆடை மற்றும் துணி பொறியியல் இறுதியாண்டு மாணவராக இருந்தபோது கண்டுபிடித்தார். இந்த கருவியை உருவாக்குவதற்கு அவர் பயன்படுத்திய அவருடைய கணித அறிவு சதுர இரட்டை தேற்றம் என அழைக்கப்பட்டது. அது அரைவட்ட மானிக்கு அடிப்படையாக அமைந்தது. 2009ஆம் ஆண்டு அவர் அவருடைய இரண்டு படைப்புகளுக்கும் கணித சூத்திரத்திற்கும் ஆக்கவுரிமை பெற்றார். அவருடைய கண்டுபிடிப்பு சர்வதேச நன்மதிப்பைப் பெற்றதோடு இலங்கைக்கும் கௌரவத்தைக் கொண்டுவந்தது. 2012ஆம் ஆண்டு உலக புலமைச்சொத்து அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஜெனீவாவில் நடைபெற்ற உலக புத்தாக்க கண்காட்சியில் கைத்தொழில் கருவிகள் துறையில் வெண்கலப் பதக்கத்தை வென்றது. மேலும் சதுர இரட்டை தேற்றத்தை கணித பாடபுத்தகத்தில் சேர்த்து பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும் என விரும்பினார்.