இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழு (SLIC)
"இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழு கொரோனா வைரசை ஒழிப்பதற்கு வினைத்திறன்மிக்க வகையில் பங்களிப்புச் செய்வதன் மூலம் தேசிய பொறுப்பை நிறைவேற்றுகிறது"
இலங்கையில் புத்தாக்கத்தைப் புதுப்பிப்பதற்கு கொரோனா வைரஸ் தொற்று வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் ரங்கிக ஹல்வதுர தெரிவித்துள்ளார்.
இலங்கை நெனோ தொழில்நுட்ப நிறுவகம் (SLINTEC)
சிரதா TV - SLINTEC தொற்று நீக்கப்பட்ட முகக் கவசம்
உலகளாவிய ரீதியில் நோய்க்கிருமிகளை தணிக்கும் திறமுறையில் முதன்மை ஆக்கக்கூறாக தொற்று நீக்கம் அவசர தேவையாக வளர்ந்துகொண்டிருக்கிறது. SLINTEC அணி தெளிவாக ஊடறுத்து தெரிகின்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மேற்பூச்சு ஒன்றை விருத்தி செய்துள்ளது. இதை பல வகையான மேற் பரப்புக்கு, அவற்றின் அழகான தோற்றத்திற்கு சேதமேற்படாத வகையில் பூச முடியும். மிக முக்கியமாக இந்த தொழில்நுட்பம் சுற்றுச் சூழலில் உள்ள காற்றிலும் இந்த பூச்சு பூசப்பட்டுள்ள மேற் பரப்பிலும் உள்ள நோய்க்கிருமிகளை அழித்துவிடுகிறது. இந்த வர்ணப்பூச்சின் நுண்ணுயிர் எதிர்ப்பு நடவடிக்கை ASTM மற்றும் ISO தரங்களுக்கு அமைவாக நன்றாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளதோடு வைரஸ் எதிர்ப்பு பரிசோதனையும் தொடர்ந்து நடைபெறுகிறது. எவ்வாறாயினும் அநுபவத்திற்கும் அறிவுக்கும் ஏற்ப பக்டீரியாவின் தரத்தைக் குறைப்பதை விட வைரஸ் தரத்தைக் குறைப்பது உயர்வாக இருக்க வேண்டும். (வைரசுக்கு பக்டீரியாவை விட தொடக்கநிலை கல கட்டமைப்பு உண்டு) SLINTEC தொழில்நுட்ப தகுதியுரிமை இப்பொழுது சிங்கப்பூர் IPI யில் - இது ஒரு உலகளாவிய தொழில்நுட்ப பரிமாற்றல் மேடை- அனுமதிப்பத்திரம் அளிக்கப்படவுள்ளது. (மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொடர்பைப் பயன்படுத்தவும்)
எமது மருத்துவ பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவுவதற்காக சிரதா TV ஏற்கெனவே "මව්බිම වෙනුවෙන් එක්වෙමු (தாய் நாட்டுக்காக ஒன்று சேர்வோம்)" என்ற தர்ம கருத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு எமது மருத்துவ சேவையாளர்களுக்கு நன்கொடையாக வழங்குவதற்கு எளிதான முகக் கவசங்களைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த முகக் கவச கருத்திட்டத்தைக் கேள்விப்பட்தன் பின்னர், ஒரு தேசிய சேவை என்ற வகையில், SLINTEC அணி சிரதா TV யினருக்கு அவர்களின் முகக் கவசத்தில் பூசுவதற்காக அண்மையில் தொற்று நீக்கப்பட்ட வெளிப்படையாகத் தெரியும் வர்ணப் பூச்சு ஒன்றை விருத்தி செய்துள்ளது. இந்த வர்ணப் பூச்சு சாதாரண முகக் கவசத்தை விட சிறந்த பாதுகாப்பளிப்பதற்கு தொற்று நீக்கும் நடவடிக்கை ஊடாக மேலதிக உதவியை வழங்கும்.