சிறில் பொன்னம்பெரும

cyrilசிறில் பொன்னம்பெரும 1923ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 16ஆம் திகதி இலங்கையில் காலியில் பிறந்தார். அவர் காலி, புனித. அலோசியஸ் கல்லூரியிலும் அதைத் தொடர்ந்து கொழும்பு புனித. யோசப் கல்லூரியிலும் கல்வி பயின்றார். அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் இளமானி பட்டம் பெற்றார். அவர் 1959ஆம் ஆண்டு இலண்டன் பிறிஸ்பெக் பல்கலைக் கழகத்தில் இரசாயனத்தில் இளமானி பட்டம் பெற்றார். 1962ஆம் ஆண்டு அவர் நொபெல் லொரேட் மெல்வின் கல்வின் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் பெர்க்லே, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இரசாயனவியலில் கலாநிதி பட்டம் பெற்றார்.

1962ஆம் ஆண்டு, ஏமெஸ் ஆய்வு மையத்தில் நாஸா நியைத்துடன் சேர்ந்து வதிவிட ஒன்றியத்தின் விஞ்ஞானத்தில் தேசிய கல்வி நிலைய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 1963ஆம் ஆண்டு நாஸாவின் உயிரியல் பிரிவில் இணைந்துகொண்டதோடு இரசாயான பரிணாம பிரிவின் பிரதான பகுதியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போலோ செயற்றிட்டத்தின் கீழ் சந்திரனிலிருந்து பூமிக்கு கொண்டுவரப்பட்ட மண்ணைப் பகுப்பாய்வு செய்வதற்கு பிரதான புலனாய்வாளராக இவர் தெரிவுசெய்யப்பட்டார். அதன் பின்னர், இவர் வைகிங் மற்றும் வொயேஜர் நிகழ்ச்சித்திட்ட செயற்பாடுகளில் நாஸாவுடன் (NASA) நெருங்கி பணியாற்றினார். அத்துடன் நாஸாவின் விண்வெளி விஞ்ஞான ஆலோசனை பேரவையிலும் வாழ்நாள் விஞ்ஞான ஆலோசனை பேரவையிலும் இவருக்கு அங்கத்துவம் வழங்கப்பட்டது.

"சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட இலங்கை விஞ்ஞானிகள் இவரைவிட வேறு ஒருவருமில்லை" என்பது ஆர்தர் சி. கிளார்கின் கருத்தாகும். அவருடைய குறுகிய வாழ்நாளில் 400க்கு மேற்பட்ட விஞ்ஞான வெளியீடுகளை அவர் வெளியிட்டுள்ளதோடு கல்விமானாக பல பதவிகளையும் வகித்துள்ளார்.

சரத் குணபால

sarathஸ்ரீ லங்கா ரணஜண சரத் குணபால, கேகாலை, யட்டியாந்தோட்டையில் பிறந்தவர். அவர் இலங்கையில் கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி பயின்றார். (1966 - 1974 / தரம் 6 - 12). இவர் 1985ஆம் ஆண்டு பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலில் கலாநிதி பட்டம் பெற்றதோடு பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலில் எம்.எஸ் (M.S.) பட்டம் பெற்றார். அத்துடன் 1979ஆம் ஆண்டு இலங்கையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலில் பீ.எஸ் (B.S.) பட்டம் பெற்றார்.

குணபால அவர்கள்  AT&T பெல் ஆய்வுகூடத்தில் வேலைசெய்ததன் பின்னர் 1992ஆம் ஆண்டு நாஸாவில் இணைந்துகொண்டார். இவர் நாஸாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுகூடத்தில் திண்ம - நிலை இயற்பியலாளராகவும், சிரேஷ்ட ஆய்வு விஞ்ஞானியாகவும் குழு மேற்பார்வையாளராகவும் கடமையாற்றுகிறார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் சக்திச் சொட்டு கிடங்கு அகச் சிவப்பு ஒளிக் காணி துறையில் செயலாற்றுகிறார். இவர் சக்திச் சொட்டு கிடங்கு அகச் சிவப்பு ஒளிக் காணி தொழில்நுட்பங்கள் (LLC) யில் சபை உறுப்பினரும் அவார்.

சந்திரே தர்மா - வர்தன

chandre1சந்திரே தர்மா - வர்தன கொழும்பில் பிறந்தவர். இவர் அளுத்கம வித்தியாலயம், கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் ரோயல் கல்லூரி என்பவற்றில் கல்வி பயின்றவர். இவர் 1961ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழகத்தில் இளம் விஞ்ஞான மானி (விஷேடம்) பட்டத்தை பெற்றவர்.

chandre2இவர் தற்பொழுது மொன்ட்றீல் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு பௌதிகவியல் பேராசிரியாக இருக்கின்றார். அத்துடன் கனடாவின் தேசிய ஆராய்ச்சி மன்றத்தில் முதன்மை ஆய்வு விஞ்ஞானியாகவும் தற்பொழுது செயலாற்றுகின்றார். இவர் புள்ளிவிபர பொறிமுறைகள், ராமன் தெறிப்புடன் தொடர்புற்ற வகையில் திண்மநிலை பௌதீகம், நெனோ கட்டமைப்பில் வலு-தளர்வு மற்றும் ஒலியமைவு, சக்திச் சொட்டு ஹாலின் தாக்கம், றெறோ குழாய்கள் மற்றும் காரீயம் தொடர்பில் பௌதீகவியல் போன்ற பல விடயங்களில் பணியாற்றுகின்றார். சத்திச் சொட்டு முறைமைக்குரிய பாரம்பரிய வரைபடத் திட்ட நிர்மாணிப்பு தொடர்பிலான இவரது பணிகளாவன அந்த பணிக்குரிய புதிய செயற்பாட்டினை அறிமுகப்படுத்தியது. இது உயர் வலைப்பின்னல் தொடர் முறைமை (hyper-netted chain method - CHNC) இனது பாரம்பரிய வரைபடம் முறைவடிவமாக்கம் செய்யப்படுவதற்கு வழிவகுத்தது. இந்த முறையானது பெர்மி திரவம் மற்றும் இளஞ்சூட்டு செறிவுடைய சடத்துவ பொருட்களின் இயல்புகளை மதிப்பிடுவதில் புதிய அணுகுமுறைக்கு இட்டுச் செல்லுகின்றது. பௌதிகவியலில் அவர் அண்மையில் வெளியிட்ட நூலின் தலைப்பு "சடத்தவம் மற்றும் சிந்தனை பற்றி ஒரு பௌதிகவியலாளரின் கண்ணோட்டம்" என்பதாகும். இந்நூல் 2013ஆம் ஆண்டு உலக விஞ்ஞான கழகத்தினால் வெளியிடப்பட்டது.

சந்திர விக்கிரமசிங்க

wikramasingheநளின் சந்திர விக்கிரமசிங்க (பிறப்பு 20 சனவரி 1939, கொழும்பு) இலங்கையில் பிறந்த பிரித்தானிய கணிதவியலாளர், விண்வெளி ஆராய்ச்சியாளர் மற்றும் விண் உயிரியலாளர். இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1960ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் முதல் வகுப்பில் இளம் விஞ்ஙான மானி சிறப்பு பட்டம் பெற்றவர். அத்துடன் இவர் முறையே திரித்துவக் கல்லூரியிலும் கேம்பிறிஜ் கல்லூரியிலும் Phd மற்றும் ScD பட்டங்களைப் பெற்றார். இவருடைய ஆய்வு தேடல்களாவன விண்மீன் ஊடகம், அகச் சிவப்பு வானியல், ஒளித் தெறிப்பு கோட்பாடு, வானியலுக்கு திண்ம நிலை பௌதிகத்தைப் பயன்படுத்துதல், சூரிய குடும்ப கட்டகத்தின் முன்னிலை, வால்நட்சத்திரங்கள், விண் இரசாயனம், வாழ்வு மற்றும் வான் உயிரியல் ஆகியவற்றின் மூலம் என்பவை உள்ளடங்குகின்றன.

விக்கிரமசிங்க 1967ஆம் ஆண்டு விண்மீன் தானியம் பற்றிய அவருடைய முதலாவது வரைவிலக்கண நூலை வெளியிட்டார். இவர் இந்த துறையில் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். சமகால மீளாய்வு சஞ்சிகைகளில் 350க்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவற்றில் 75க்கு மேற்பட்டவைகள் இயற்கையை பற்றி கூறுவதாகும். பிரட் ஹொயில் மற்றும் விக்கிரமசிங்க ஆகியோர் (பிரட் ஹொயில் ஒருங்கிணைப்பாளராகவும் மாணவராகவும்) மேலும் இசைவான சூழ்நிலையில் பெருக்கம் அடையத்தக்க நுண்மங்கள் நிலவுலகுக்கு புறம்பாக உருவாகும் உயிர்கள் புவியின் வாயுகோளத்தில் பிரவேசிக்கின்றன என்பதையும் அதனால் புதிய நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் புதிய மரபணு கூறுகள் உருவாகும் சாத்தியம்பற்றி கூறியுள்ளனர். பிரட் ஹொயில் மற்றும் விக்கிரமசிங்க ஆகியோரின் கருத்துக்கள் பேரளவு பரிணாமத்திற்கு அவசியமானதாகும்.

பவுல் எட்வர்ட் பீரிஸ் தெரனியகல

poulஎட்வர்ட் பீரிஸ் தெரனியகல 1900ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்தார். இவர் ஒரு விலங்கு நூல் ஆய்வாளர், ஒளியியலாளர் மட்டுமல்ல இவர் ஒரு கலைஞருமார். இவர் தனது இளமானி மற்றும் கலைமாமணி பட்டங்களை கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். அத்துடன் இன்னுமொரு MA பட்டத்தை 1924ஆம் ஆண்டு ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். கலாநிதி தெரனியகல மரங்கள் மற்றும் இந்திய துணை கண்டத்தின் மனித எச்சங்கள் என்பவை பற்றிய நிபுணராக இருந்தார். இவர் 1939 முதல் 1963 வரை இலங்கை தேசிய நூதனசாலை பணிப்பாளராக இருந்தார். 1961 முதல் 1964 வரை வித்தியோதய பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தின் பீடாதிபதியாக இருந்தார்.

அவருடைய எச்சங்கள் மற்றும் இனங்கள் என்பன தன்னின உயிருண்ணும் பலாங்கொடை மனிதன், மரபழியும் இலங்கை சிங்கம், மரபழியும் இலங்கை காட்டெருது மற்றும் மரபணு அழிந்து வரும் இலங்கை காண்டா மிருகம் மற்றும் மரபணு அழிந்துள்ள இலங்கை ரைனோ சிரஸ் என்பவை பற்றி சித்தரிக்கின்றது. அத்துடன் அவர், சீன முதலைக்கு புதிய இன பெயரைச் சூட்டியுள்ளார். மேலும் ஊர்வன நூலில் பல புதிய பல்லி வகைகள், பாம்பு வகைகள் என்பவற்றை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். கலாநிதி தெரனியகல 1952 முதல் 1955 வரை றோயல் ஆசிய கண்ட சங்கத்தின் இலங்கை கிளையின் தலைவராக சேவையாற்றியுள்ளார்.

மொஹான் முனசிங்க

mohanபேராசிரியர் முனசிங்க சமாதானத்திற்கான நோபல் பரிசுபெற்ற முதலாவது இலங்கையராவார். இவர் ஒரு பௌதிவியலாளர், கல்விமான், ஒரு பொருளியலாளர். இவர் காலநிலை மாற்றம் பற்றிய (IPCC) அரசாங்கத்திற்கிடையிலான குழாமின் உபதலைவராக இருந்து 2007ஆம் ஆண்டு நோபல் சமாதான பரிசைப் பகிர்ந்துகொண்டார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியை நிறைவுசெய்தார். 1967ஆம் ஆண்டு பொறியியலில் BA கௌரவ பட்டத்தைப் பெற்றார். அவருடைய முதுமானி பட்டத்தை ஐக்கிய இராச்சியத்தின் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

பேராசிரியர் முனசிங்க ஐக்கிய அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தில் மின் பொறியியலில் தொழில்சார் மின் பொறியியலாளர் (EE) பட்டத்தையும் (SM) பட்டத்தையும் பெற்றார். அத்துடன் கனடா, மெக்ஜில் பல்கலைக்கழகத்தில் திண்ம நிலை பௌதிகவியலில் PhD பட்டம் பெற்றார். மேலும் கனடா, கொன்கோர்டியா பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி பொருளியலில் MA பட்டம் பெற்றார். பேராசிரியர் முனசிங்க நூற்றுக்கு மேற்பட்ட புலமைசான்ற புத்தகங்களின் ஆசிரியராவார். மேலும் காலநிலை மாற்றம், அனர்த்தங்கள், சூழலியல், நிலைபேறான அபிவிருத்தி, வலுசக்தி, போக்குவரத்து, நகர உட்கட்டமைப்பு, நீர் வளங்கள், தொலைதொடர்பு, நிலைபேறான நுகர்வு மற்றும் உற்பத்தி ஆகிய புகழ்பெற்ற விஞ்ஞான சஞ்சிகைகளில் சுமார் முன்னூறு ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார்..

ஏ.என்.எஸ். குலசிங்க

kulasingheகுலசிங்க ஜா-எல உடம்மிட்ட என்ற இடத்தில் பிறந்தார். அவர் முதலில் வாதுவ ஆங்கில ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா கல்லூரியில் கல்வி கற்றார். அதன் பின்னர் உயர் கல்விக்காக அவர் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியில் இணைந்துகொண்டார். இலண்டன் பல்கலைககழகத்தின் பொறியியலில் இளம் விஞ்ஞான மானியினை கற்பதற்காக இலங்கை தொழில்நுட்ப கல்லூரியில்; சேர்ந்தார். அங்கு அவர் சந்திரசேகர புலமைப்பரிசிலைப் பெற்றார். 1946ஆம் ஆண்டு சிவில் பொறியியல் நிறுவகத்தில் (AMICE) உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்..

குலசிங்க கிரய தொழில்நுட்பம், புதிய முறை நிர்மாண உத்திகள் மற்றும் அவருடை பொறியியல் செயற்பாடுகளில் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துதல் என்பவற்றில் கவனம் செலுத்தினார். முற்கூட்டியே வார்க்கப்பட்ட கொன்கிறீட், முற்கூட்டியே அழுத்தப்பட்ட கொன்கிறீட், மாற்று குறைந்த செலவு நிர்மாண பொருட்கள், பெரோ-சிமெந்து படகு கட்டுதல், நிர்மாண துறையில் சிப்பி வடிவ கோட்பாடு என்பவற்றைப் பயன்படுத்துதல் என்பவை இலங்கையில் பல பிரதான பொறியியல் கட்டமைப்புகளில் பயன்படுத்தப்பட்டன.

அவர் கொத்மலை மகாவலி மகா தாதுகோபுரத்தையும் கொழும்பு துறைமுகத்தில் புத்த ஜயந்தி தாதுகோபரத்தையும் அமைப்பதற்கு உதவினார். பொல்கொல்ல அணைக்கட்டு, அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைமை அலுவலகம், கொழும்பு கோள் மண்டலம் என்பவை குலசிங்க அவர்களால் வடிவமைக்கப்பட்டன.

ரே விஜேவர்தன

rayதேசமான்ய வித்யா ஜோதி கலாநிதி பிலிப் ரேவத 'ரே' விஜேவர்தன கொழும்பில் பிறந்தார். இவர் ஆரம்ப கல்வியையும் இரண்டாம் நிலை கல்வியையும் கொழும்பு CMS மகளிர் கல்லூரியிலும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரியிலும் கற்றார். அவர் பீற்றர்ஹவுசுக்குச் சென்று ஐக்கிய இராச்சியத்தின் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியலின் மூன்று பிரிவுகளான வான்வழி சார்ந்த பொறியியல், எந்திரவியல், விவசாய பொறியியல் என்பவற்றைக் கற்று M.A.  (கென்டப்) பட்டம் பெற்றார். அவர் இலங்கையிலும் ஐக்கிய இராச்சியத்திலும் படடய பொறியியலாளராகத் தகைமை பெற்றார். பின்னர் ஹாவார்ட் வியாபார பாடசாலையில் வியாபார நிர்வாக பாடத்தைக் கற்றுத்தேர்ந்தார்.

இவர் ஒரு பொறியியலாளர், வானூர்தியாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு வீரர். இவர் வெப்பவலய பண்ணை விவசாயம் மற்றும் இயற்கை வள முகாமைத்துவம் என்பவற்றில் அதிகாரம் பெற்றிருந்தார். அபிவிருத்தியடையும் நாடுகளில் சிறிய விவசாயிகளுக்கு உதவுவதற்காக பல கருவிகளைக் கண்டுபிடித்தார். விஜேசிறிவர்தன அவர்கள் உலர் வலய சிறு விவசாயிகள் அவர்களின் வேலைகளில் இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்காக அவர்களுக்கு உதவும்பொருட்டு இரண்டு சக்கர, நடக்கும் உழவு இயந்திரத்தை 1955ஆம் ஆண்டு வடிவமைத்தார். பசுமைப் புரட்சியின்போது பண்ணைத் தொழிலில் இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப முயற்சியாகும் இது. இது ஐக்கிய இராச்சியத்தின் நொட்டிங்ஹாம் லேண்ட் மாஸ்டர் கம்பனியினால் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்பட்டது.

வீ.கே. சமரநாயக்க

samaranayakeவித்யா ஜோதி வீ. கே. சமரநாயக்க, MBCS, MCS (SL), FNASSL, MIEEE (1939-6 யூன் 2007) கொழும்பில் பிறந்தார். அவர் கொழும்பு றோயல் கல்லூரியிலும் ஆனந்தா கல்லூரியிலும் கல்வி பயன்றார்.

கணினி கணிப்பீடு மற்றும் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி என்பவற்றை இலங்கையில் பயன்படுத்துவதில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். அந்த வகையில் அவர் இலங்கையின் "தகவல் தொழில்நுட்பத்தின் தந்தை" என கருதப்பட்டார். கணினி விஞ்ஞான பேராசிரியரான அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதியாகவும் இருந்தார். பேராசிரியர் சமரநாயக்க இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட கல்வி ஆகியவற்றை விருத்தி செய்வதில் பிரதான பங்காற்றியுள்ளார். அவர் மரணமடையும்போது இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவராக இருந்தார். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி பாடசாலையின் (UCSC) முன்னாள் பணிப்பாளராகவும் ஸ்தாபகராகவும் இருந்தார்..

நளின் சமரசிங்ஹ

nalinகலாநிதி நளின் சமரசிங்ஹ இலங்கையில் பிறந்து தற்பொழுது ஐக்கிய அமெரிக்காவில் வானிலை ஆராய்ச்சியாளராக இருக்கின்றார். கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்விகற்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலில் இளம் விஞ்ஞான மானி முதலாம் வகுப்பு விசேட பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் கொலேஜ் பார்க், மேரிலேன்ட் பல்கலைக்கழகத்தில் வானிலை ஆராய்ச்சியில் முது விஞ்ஞான மானி பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவின் அதே பல்கலைக்கழகத்தில் வானிலை ஆராய்ச்சியில் PhD பட்டம் பெற்றார்.

தற்பொழுது அவர் கோள்மண்டல விஞ்ஞான நிறுவகத்தில் சிரேஷ்ட விஞ்ஞானியாகப் பணியாற்றுகின்றார். கலாநிதி சமரசிங்ஹவின் ஆய்வு ஆர்வம் சூரிய குடும்பத்தின் வால் நட்சத்திரம் மற்றும் ஏனைய சிறிய நட்சத்திரங்கள் மீது கவனம் செலுத்தச்செய்தது. அவருடைய ஆய்வுகளில் வால்நட்சத்திரத்திர மையத்தின் பௌதிக மற்றும் இரசாயனத்தைப் புரிந்துகொள்ளுதல் உள்ளடங்கியுள்ளது. அத்துடன் சுழற்சிமுறையான அவருடைய ஆய்வில் வால்நட்சத்திரத்தின் மையம் மற்றும் அதன் வரைவிலக்கணம், சூரிய குடும்பத்தின் சிறிய நட்சத்திரங்களின் கட்டமைப்பு இயல்புகள், மாறும்-நெப்ரியூன் கோளின் பெளிதிக இயல்புகள், நட்சத்திரங்களின் பௌதிக இயல்புகள் என்பவை உள்ளடங்குகின்றன. 2002ஆம் ஆண்டு சர்வதேச வானிலை ஆராய்ச்சி ஒன்றியம் Asteroid (12871) என மீள பெயரிடப்பட்டது. 1998ஆம் ஆண்டு லோவெல் அவதான நிலையத்தினால் (Lowell Observatory) Asteroid (12871)  என்ற வகையில் சமரசிங்ஹ அவர்கள் கலாநிதி நளின் சமரசிங்ஹ என கௌரவிக்கப்பட்டார். கலாநிதி சமரசிங்ஹவுக்குப் பின் Asteroid என்று பெயரிடப்பட்டு கௌரவிக்கப்பட்ட முதலாவது இலங்கையராவார்.

கீர்த்தி தென்னகோன்

kirthyஇவர் இலங்கையில் வெயங்கொட நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 1940ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிள்ளைப் பருவத்தில் கிராம சூழலில் வளர்ந்தார். இவர் இலங்கையில் வெயங்கொட மத்திய கல்லூரியில் ஆரம்ப கல்வியைக் கற்றார்.

அவருடைய ஆய்வு ஆர்வத்தில் பௌதிகம், இரசாயனம், உயிரியல் ஆகிய விடயங்களின் கோட்பாடுகளும் பரிசோதனைகளும் உள்ளடங்குகின்றன. பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 350க்கு  மேற்பட்ட வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். இவர் இலங்கை அடிப்படை கற்றை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளராவார். (தற்பொழுது இதற்கு அடிப்படை கற்கைகளுக்கான தேசிய நிறுவகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது). மேலும் இவர் இலங்கையின் றுகுணு பல்கலைக்கழகத்தின் முதலாவது பௌதிகவியல் பேராசிரியராவார். நட்சத்திர மையம் பெரிதாக இருக்கலாம் என்றும் மற்றும் வானிலை பௌதிக பயன்பாடுகளை கவனத்தில் கொள்தல் என்பது பற்றியும் முதலாவதாகக் கருத்துத் தெரிவித்த சன்டிப் பக்வாசா அவர்களின் மேற்பார்வையின் கீழ் கோட்பாட்டு பௌதிகவியலில் கலாநிதி பட்டம் பெறுவதற்காக அவர் கல்வியை தொடர்ந்தார். ஒடுக்கப்பட்ட சடப்பொருள் பௌதிகவியலில் அரை கடத்தும் பொருட்களான செம்பு (ஏ) தியோசைநேட், அபூர்வமான உதாரணமாக ஊடுருவித் தெரியும் p-வகை அரை கடத்தி, தற்பொழுது அவற்றின் மெல்லிய சவ் தன்மையின் காரணமாக பல கருவிகள் மற்றும் பொறிமுறைகள் தற்பொழுது அதனை பயன்படுத்தி விருத்தி செய்யப்பட்டுள்ளது. அவரே வர்ண- உணர்வுமிக்க திண்ம நிலை சூரிய கலத்தின் எண்ணக்கருவை முழுவதாக அறிமுகப்படுத்தியவர் என்பதுடன் இதன் மூலவகை மாதிரியினை பயன்படுத்தி செயல்முறைசார் பயிற்சிப் பட்டறையும் இவரால் நடத்தப்பட்டது. இலங்கை அரசாங்கம் கல்விக்கும் ஆய்வுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து இரண்டு சந்தர்ப்பங்களில் அவரை கௌரவித்தது. (1986ஆம் ஆண்டு "வித்தியா நிதி" மற்றும் 2005ஆம் ஆண்டு "தேசபந்து") இந்த கோளில் உலக வாழ்வுக்கு உதவும் ஆதார முறைமைகளில் உள்ள அச்சுறுத்தலையும் சூழலியல் பாதிப்பையும் பற்றி 1992ஆம் ஆண்டில் உலக தலைவர்களுக்கு சமர்ப்பித்த ஆவணத்தில் கையொப்பமிட்ட விஞ்ஞானிகள் ஒன்றியத்தில் இவரும் ஒருவராவார்..

பந்துல விஜே

bandulaபந்துல விஜே காலியில் பிறந்தார். அவர் இந்தியாவில் கல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியைக் கற்றார். அதன் பின்னர், அவர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுமானி பட்டங்களையும் இரசாயன பொறியியலில் ஒரு கலாநிதி பட்டத்தையும் பெற்றார். கலாநிதி பந்துல விஜே ஒரு கண்டுபிடிப்பாளர், விஞ்ஞானி. பொறியியலாளர் மட்டுமல்ல பாதுகாப்பு இதய பலூன் என்ஜியோபிளாஸ்ரி (PPTCA) உள்ளிட்ட ஏனைய மருத்துவ கருவிகள் உட்பட இதயநோய் சிகிச்சைக்கு உரிய கருவிகளை விருத்திசெய்த வியாபாரியுமாவார்.

1982ஆம் ஆண்டிலிருந்து, விஜே 28 மருத்துவ கருவிகளுக்கு ஆக்கவுரிமை பெற்றிருந்தார். குழாய் வழியில் இன்னும் ஏழு ஆக்கவுரிமைகள் அவருக்கு வழங்கப்படுதல் குறித்து கலந்துரையாடல்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. "இப்பொழுது நான் பிரதானமாக கவனம் செலுத்துவது இழைய விரிவாக்கம் போன்ற பொருத்தப்பட்ட கருவிகளில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காகும்" என அவர் சொல்லுகிறார். மேலும் "உடலுக்குள் பொருத்தப்படுகின்ற ஸ்டென்ட்களை விருத்திசெய்வதாகும்" எனவும் அவர் கூறுகிறார்.

ஐ.எம். தர்மதாச

dharmadasaஐ.எம். தர்மதாச இரசாயனவியல், பௌதிகவியல் மற்றும் கணிதவியல் என்பவற்றில் இரண்டு இளமானி விசேட கௌரவ பட்டங்களைப் பூர்த்திசெய்து இலங்கை பேராதெனிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். 1977ஆம் ஆண்டு பகிரங்க பொதுநலவாய புலமைப்பரிசை வென்று தர்ஹாம் பல்கலைக்கழகத்தில் 1980ஆம் ஆண்டு அவருடைய PhD ஆய்வுகட்டுரையைப் பூர்த்திசெய்தார்.

பேராசிரியர் தர்மதாச ஷெப்பீல்ட் ஹல்லாம் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொருட்கள் மற்றும் கருவிகளில் சிரேஷ்ட பதவிநிலை தர பேராசிரியராக இருக்கின்றார். அவருடைய ஆய்வுகள் அடுத்த தலைமுறையின் அபிவிருத்தி மற்றும் குறைந்த செலவு மற்றும் கூடிய வினைத்திறன்மிக்க சூரிய கலம் என்பவை தொடர்பிலும், கைத்தொழில் மற்றும் கல்வித்துறை ஆகிய இரண்டிலும் அவருக்கு சுமார் நான்கு தசாப்த அனுபவம் உண்டு. அவர் 250க்கு மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவரே எழுதிய "மென் சவ்வு சூரிய கலங்களில் உள்ள அனுகூலங்கள்" என்ற நூலும் உள்ளடங்குகின்றது. அவருடைய படைப்புகள் புதிய அபிவிருத்தி நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு ஆறு ஆக்கவுரிமைகளைப் பெற்றுள்ளது. மேலும் அவர் ஒளி மின்னழுத்த சூரிய கலங்களின் விருத்தி பற்றிய இரண்டு புதிய விஞ்ஞான மாதிரிகளை முன்மொழிந்துள்ளார்.

ஆஷா டி வொஸ்

ashaஆஷா டி வொஸ் இலங்கை சமுத்திர உயிரியலாளர், சமுத்திர கல்விமான் மற்றும் வட இந்திய சமுத்திரத்தில் நீல திமிங்கில ஆராய்ச்சி பற்றிய முன்னோடி ஆய்வாளர்.

ஆஷா தனது ஆரம்ப கல்வியை கொழும்பு மகளிர் கல்லூரியில் கற்றார். ஆரம்ப கல்வியை நிறைவுசெய்ததன் பின்னர், புனித அன்றுஸ் பல்கலைக்கழகத்தில் சமுத்திரவியல் மற்றும் சூழலியல் உயிரியலில் பட்டப்படிப்பை மேற்கொள்ளுவதற்காக அவர் ஸ்கொட்லாந்துக்குச் சென்றார்.  தொடர்ந்து அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த உயிரியலில் முதுமானிப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் PhD பட்டம் பெற்றார்.

இயற்கையைப் பாதுகாக்கின்ற சர்வதேச ஒன்றியத்தின் சமுத்திரவியல் மற்றும் கரையோர அலகில் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரியாக சேவையாற்றினார். அவர் 2008ஆம் ஆண்டு இலங்கை நீல திமிங்கில கருத்திட்டத்தை ஸ்தாபித்தார். அவர் IUCN இனங்கள் உயிர்வாழ் ஆணைக்குழுவின் கடற் பாலூட்புயினம் பற்றிய நிபுணர்கள் குழுவின் அழைக்கப்பட்ட அங்கத்தவராக இருந்தார். ஆஷா TED சிரேஷ்ட கல்வியாளராக, சமுத்திர பாதுகாப்பில் டியூக் பல்கலைக்கழகத்தில் உலக கல்வியாளராக சிறப்புப் பெற்றிருந்தார். அத்துடன் உலக் பொருளாதார ஒன்றியத்தினால் இளம் உலக தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். 2013ஆம் ஆண்டு விஞ்ஞானவியல் வெளியீடுகளுக்காக அவர் ஜனாதிபதி விருது பெற்றார்.

திஸ்ஸ எச். இளங்கசேகர

thissaகலாநிதி இளங்கசேகர இலங்கை பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலில் (1971) விஞ்ஞான இளமானி (விசேட) பட்டத்தைப் பெற்றார். ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் நீரியல் மற்றும் நீர்வள அபிவிருத்தியில் (1974) முதுமானி பட்டம் பெற்றார். தனது PhD பட்டத்தை (1978) கொலராடோ அரச பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலில் பெற்றுக்கொண்டார். அத்துடன் சுவீடன், அப்சலா பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் கௌரவ கலாநிதி பட்டம் பெற்றார்.

ஊடுருவத்தக்க மற்றும் பகுதிபடுத்தத்தக்க ஊடகத்தில் பாய்வு மற்றும் கொண்டு செல்லத்தக்கவைகளை மாதிரிப்படுத்தல் என்பதே உருமாதிரி இளங்கசேகர அவர்களின் முதன்மை ஆய்வு பகுதியாக இருந்தது. அவருடைய ஆய்வில் பல பகுதிகள் உள்ளடங்கியிருந்தன. அவையாவன மண் பாய்வில் செறிவுள்ள மற்றும் செறிவற்ற எண் உருமாதிரி பகுதிகள், பகுதிபடுத்தப்பட்டதுமான மேற்பரப்பு-துணை மேற்பரப்பு, உலர் வலய நீரியல், ஒருங்கிணைக்கப்பட்ட நிர் உருமாதிரி, துணை பனிக்கட்டி பாய்வு, கரைந்த மற்றும் பன்னிலை கழிவுகளைக் கொண்டு செல்தல், சூழலியல் கண்காப்புக்கு கம்பியில்லாணி உணர்வலை வலையமைப்பு மற்றும் புலமையுள்ள பரிகாரம் மற்றும் வலுசக்தி அபிவிருத்தியில் சூழலியல் அழுத்தங்கள் என்பவை அவருடைய ஆய்வில் உள்ளடங்கியிருந்த பகுதிகள் தரும்.

கலாநிதி திஸ்ஸ எச். இளங்கசேகர, ஜனாதிபதி பரக் ஒபாமா அவர்களால் 2017 ஜனவரி 18ஆம் திகதி ஐ.கு. அணு கழிவு தொழில்நுட்ப மீளாய்வு சபைக்கு நியமிக்கப்பட்டார். அவர் AMAX கௌரவிக்கப்பட்ட சூழலியல் மற்றும் பொறியியல் தலைவராக பதவி வகித்தார். துணை மேற்பரப்பு சூழலியல் நடைமுறையின் (CESEP) பரிசோதனை ஆய்வு நிலையத்தின் பணிப்பாளராகவும்  சிவிலி பொறியியல் பேராசிரியராகவும் செயலாற்றினார்.

அருண வீரசூரிய

arunaஅருண வீரசூரிய PVMUவில் (டெக்சாஸ் A&M பல்கலைக்கழக முறைமை) பேராசிரியராக இருக்கிறார். அவர் ஹொங்கொங்கில் உள்ள ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் அவருடைய Ph.D.  (பொறிதொகுதி முறைகள்) பட்டத்தைப் பெற்றார். இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானி பட்டம் பெற்றார் (உயிரியல்).

ஒழுங்குமுறைகள், தழையுணி மற்றும் மலர் தாவரங்களின் இனப்பெருக்க உயிரியல், அனோனசி, மரத்துண்டு, தாவரவியல் இனப்பரப்பு, மூலிகை தாவரங்கள், இரசாயனம், தோட்டக்கலை, சூழலியல், அதிவேகமாக பரவி வளரும் தாவர இனங்கள், பயிர் வளர் உறவுகள், இலங்கை, தாய்லாந்து, சீனா மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் மலர் தாவரங்கள் போன்றவற்றை ஆராய்ச்சிசெய்வதில் நிபுணராகத் திகழ்ந்தார்.

 

அஜித் அமரசேகர

ajithகலாநிதி அஜித் அமரசேகர TI கல்விமான் மற்றும் TIஇன் உயர் செயலாற்றுகை Analog பிரிவின் IEEE கல்விமானாவார். 1986ஆம் ஆண்டு அவருடைய Ph.D. பட்டம் பெற்ற பின்னர் முதலாவது துணை மைக்ரோன் அரை வெப்பக்கடத்தி அபிவிருத்தி பற்றிய நெதர்லாந்தின் இன்ட்ஹோவன் பிலிப்ஸ் ஆய்வு கூடத்தில் பணியாற்றினார். 1991ஆம் ஆண்டு டல்லாஸ், டெக்சாஸ் கருவிகள் நிலையத்தில் சேர்ந்தார். அங்கு VLSI வடிவமைப்பு ஆய்வுகூடத்தில் கருவிகள் மற்றும் சுற்று மாதிரி என்பவற்றுடன் புதிய கணு நடைமுறைகள் மற்றும் சுற்று வடிவமைப்பு உத்திகள் ஆகியவற்றில் பணியாற்றினார். TIயின் கம்பியில்லா உற்பத்திகளுக்கான உயர்வேகம், உயர் தரவு வீதம் மற்றும் குறைந்த வலுதிறன் கொண்ட சுற்று தொழில்நுட்பங்கள், வலையமைப்பு தீர்வுகள், டிஜிட்டல் சமிக்ஞை நடவடிக்கைகள் என்பவற்றுடன் சேர்த்து TI செயன்முறை தொழில்நுட்பத்தில் அமுல்படுத்தப்பட்ட, SUN மைக்ரோ சிஸ்டத்தினரது SPARC செயல்முறைகளில் பணியாற்றினார். 2008ஆம் ஆண்டு TI கில்பி ஆய்வுகூடத்தின் ஸ்தாபக பணிப்பாளராக இருந்தார். அங்கு அவர் புதிய சந்தை மற்றும் தொழில்நுட்பத்திற்கான புத்தாக்கங்களையும் நீண்டகால கண்டுபிடிப்புகளையும் உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை உருவாக்குவதற்குப் பொறுப்பாக இருந்தார். 2012ஆம் ஆண்டு அவர் உயர் செயலாற்றுகை அனலொக் வியாபார பிரிவிற்கு அதன் பிரதான தொழில்நுட்ப உத்தியோகத்தராகத் கடமையாற்றுவதற்கு மீண்டும் வந்தார். அஜித்துக்கு வழங்கப்பட்ட ஆக்கவுரிமைகள் 30 இருக்கின்றன. அத்துடன் தொழில்நுட்ப சஞ்சிகைகளிலும் மகாநாடுகளிலும் 100க்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுகளில் 4 நூல்களை எழுதியுள்ளார்

சுமேத ஜயசேன

Sumedhaபேராசிரியர் சுமேதா ஜயசேன உயிரியல் இரசாயன துறையில் லேஹை பல்கலைக்கழகத்தில் PhD பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரசாயன துறையில் விஞ்ஞான இளமானி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். நாலந்தா கல்லூரியில் உயர் கல்வியைக் கற்றார்.

இவர் மருந்தாக்க கைத்தொழிலும் உயிரியல் தொழில்நுட்பத்திலும் 25 வருடங்களுக்கு பரந்த அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகவும் வினைத்திறன்மிக்க ஆராய்ச்சி அணியை உருவாக்கி முகாமைத்துவம் செய்யக்கூடிய முகாமையாளரும் ஆவார். உலகளாவிய ரீதியில் அவருக்கு இருபத்தொன்பது ஆக்கவுரிமைகள் உள்ளன. அவற்றில் நோய்களுக்கான சிகிச்சை, நோய்களை இனம் காணல் போன்றுள்ள அநேகமானவைகளுக்கு வர்த்தக ரீதியிலான வாய்ப்பு வளங்கள் அதிகமாகும். அவர் மரபணுவியல், Oligonucleotide நோயறிதல் மற்றும் நோய்நீக்கியல் Oncology உயிரியல் குறியீட்டாளர்கள் RNA தொடர்பில் விபரங்கள் (RNAi) பயன்பாடுகள் (siRNA - miRNA - அடிப்படையிலான நோய் சிகிச்சை) மரபணு சீர்படுத்தல், மானியங்களை எழுதுதல் மற்றும் IND சமர்ப்பிப்புகள்.

பிரீதி குணரத்ன

preethiநெக்ஸ்ட்ஜென் சிகுவென்சிங் மையத்தின் பணிப்பாளரான பேராசிரியரான பிரீதி குணரத்ன, மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் (UH) உயிரியல் மற்றும் உயிர் இரசாயனவியல் இணை பேராசிரியராக கடமையாற்றியதுடன் பிரிவின் மனித மரபணு வரிசை மையத்தின், (Baylor-HGSC) நோய்கூறியல் திணைக்களம், மற்றும் பேலர் மருத்துவ கல்லூரியின் டேன் எல். டன்கென் புற்றுநோய் நிலையம் (BCM) என்பவற்றில் இரட்டை நியமனம் பெற்றிருந்தார். அவர் கொர்னெல் பல்கலைக்கழகத்தில் மரபணுவில் Ph.D பட்டம் பெற்றார். டாக்டர் குணரத்ன தற்பொழுது NHGRI பறவையின மற்றும் உயிர் பாலூட்பு மரபணு தொடர்வரிசை கூட்டமைப்பின், NCI - புற்றுநோய் மரபணு முன் முன்னெலும்பின் (TCGA) மைக்ரோ RNA நிபுணராக சேவையாற்றுகிறார். 2000ஆம் ஆண்டில் சர்வதேச மனித மரபணு கருத்திட்டத்திற்காக (IHGP) பெய்லர் - HGSCயில் அவர் மரபணு தொடர்வரிசை பணிப்பாளராக செயலாற்றினார். மிருக மரபணு சேர்க்கையின் (MGC) மாபெரும் தனி தொடர் பங்களிப்பாக 15,000 தொடர்வரிசையை வழங்கியிருந்தார். 2005ஆம் ஆண்டு டாக்டர் குணரத்ன UHஇல் சேர்ந்து முதன் முதலாக மரபணு பணித்தளமாக செயற்படக்கூடியதொரு பணித்தள மேடையை புற்றுநோய், மன சிதைவு நோய், ஆஸ்மா/COPD/சீழ்கட்டி, பாடல் பறவையின் பாட்டுக்கு முன்மூளை பதிலளித்தல், நச்சுக்கொடி மற்றும் மயிரடர்ந்த வாலுடைய சிறு குரங்கின் மூளை வைரஸ் பறவைக் காய்ச்சல் என்பவற்றுக்காக அமைத்தார். தனது கண்டுபிடிப்புகளைத் துரிதமாக மருத்துவ செயற்பாடுகளாக மாற்றுவதற்கு டாக்டர் குணரத்ன NEXTmiRNA தொழில்நுட்பத்தை கண்டுபித்தார். இது வளர்ந்து வரும் புற்றுநோய்க்கான microRNA கட்டியை அழிப்பது தொடர்பில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கம்பனியாகும். டாக்டர் குணரத்ன 80 மூல கட்டுரைகளின் இணை ஆசிரியராவார். இவர் ஒரு கண்டுபிடிப்பாளர்/ 7 ஐ.அமெ. ஆக்கவுரிமைகளின் இணை கண்டுபிடிப்பாளர் "Frontiers in Non-Coding RNAs" என்ற சஞ்சிகையின்மீளாய்வு ஆசிரியராவார். மேலும் 20 சஞ்சிகைகளின் மீளாய்வாளராவார். தேசிய சுகாதார நிறுவகம் (NIH), தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி பேரவை (NHMRC), அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியத்தை சார்ந்த புற்றுநோய் ஆராய்ச்சி உள்ளிட்ட 10 பிரதான மீளாய்வு குழாத்தின் மீளாய்வாளராவார்.

எஸ். ரவி பி. சில்வா

raviஇலங்கையில் இரண்டாம் நிலை கல்வி கற்றதன் பின்னர். எஸ். ரவி பி. சில்வா பட்டப்படிப்புக்காகவும் பட்டப்பின்படிப்புக்காகவும் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் திணைக்களத்தில் இணைந்துகொண்டார். அவர் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் இருக்கும்போது கேம்பிறிஜ் பொதுநலவாய நம்பிக்கை தோழமை கழகத்தின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார் என்பதுடன் இவர் கிளயார் கல்லூரி அங்கத்தவருமாவார். ரவி சில்வா உயர் தொழில்நுட்ப நிறுவகத்தின் (ATI) பணிப்பாளராவார் என்பதுடன் இடைதுறை ஆராய்ச்சி செயற்பாடுகளை முன்னெடுக்கும் நெனோ இலத்திரனியல் நிலையத்தின் (NEC) தலைவராவார். இது ஒழுக்காற்று ஆராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனமாகும்.

அவருடைய ஆராய்ச்சி ஆர்வமானது விரிவான பரப்பெல்லைகளை கொண்டதாகும். இது அடிப்படை தொனிப் பொருள்களான பின்வரும் துறைகளினை உள்ளடக்கும். அவையாவன, நெனோ தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தகு சக்தி என்பன சூரிய சக்தி மின்கலங்கள், வலுசக்தி உபகரணங்கள், காபன் இலத்திரனியல், டிரான்சிஸ்டர் வடிவமைப்புபகள் மற்றும் உருப்போலிகள், OPV, OLEDs, CNT, காரீயம், SGT, CFRP, DLC நெனோ-உயிரியல் தொழில்நுட்பம், நெனோ காபன், நெனோ தொழில்நட்பம், நீர் தொழில்நுட்பம், இலத்திரனியல் எனப்படும் பரந்த பகுதி மற்றும் மின்னனுவியல், ஒளிபடவியல் கருவிகள் என்பன உள்ளடங்குகின்றன. அவருடைய ஆராய்ச்சிகள் சர்வதேச மகாநாடுகளில் 600க்கு மேற்பட்ட சமர்ப்பணங்களைக் கொண்டிருக்கின்றன. மேலும் 550க்கு மேற்படட சஞ்சிகைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார். 15,000க்கு அழைப்புகளைப் பெற்றுள்ளார். (கூகுல் அறிஞராக) மற்றும் கூகுல் H சுட்டி.

2003ஆம் ஆண்டு £6.68M பெறுமதியான EPSRC விருது பேராசிரியர் சில்வாவுக்கும் அவருடைய அணிக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட இலத்திரனியலுக்காக வழங்கப்பட்டது. இது கண்ணாடி மற்றும் புகைப்பட கருவிப் பொருட்கள் பற்றிய அம்சங்களின் வடிவமைப்பை நெனோ அளவில் பரீட்சித்தமைக்காகும். 2004ஆம் ஆண்டு £4M பெறுமதியான விருதானது SRIF இனால் பல்துறை ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு நெனோ மின்னனுவியல் நிலையத்தை தாபிப்பதற்காகவும் மற்றும் நெனோ - EU Sensation மற்றும் EU Carbio நிகழ்ச்சித்திட்டத்தின் மேம்பாட்டிற்கான ஆராய்ச்சிக்காகவும் வழங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நெனோ தொழில்நுட்ப துறையில் அவர் ஆற்றிய சேவைக்காக அவரை கௌரவிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் சனாதிபதி விருது வழங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு சினாவின் டாலியன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் திருவருகை பேராசிரியர் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டார். 2017ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம், சீனாவின் Zengzhou Materials Genome நிறுவகத்தில் (ZMGI) கௌரவ பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.