தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் வெட்டுமரக் குற்றிகளை வடிவமைக்கும் புத்தாக்க நிலையத்தையும் (TDIC) வெட்டுமரக் குற்றிகளைப் பதனிடும் புத்தாக்க நிலையத்தையும் (TPIC) ஸ்தாபிக்கும் பணிகளைத் துரிதப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இலங்கை வெட்டுமர கைத்தொழிலுக்கு பெறுமதி சேர்க்கும் முன்னெடுப்பாக இது அமைவதோடு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மீது இது அமுலாக்கப்படுகிறது.

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் (COSTI) கீழ் இயங்குகின்ற விஞ்ஞானத்திற்கான இணைப்பாக்க செயலகம் மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் என்பவற்றுடன் கூட்டிணைந்து இந்த இரண்டு வெட்டுமர புத்தாக்க நிலையங்களை அமைக்கும் பணிகளை ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த இரண்டு புத்தாக்க நிலையங்களும் இயங்கத் தொடங்கியவுடன், எதிர்காலத்தில் முழுமையாக வளரும் வெட்டுமர புத்தாக்க நிலையங்களாக உலக ஏற்றுமதி சந்தைக்கு வெட்டுமரத்தை அடிப்படையாகக் கொண்ட புத்தாக்க வடிவங்களை அறிமுகப்படுத்துவதற்கு இந்த நாட்டுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும்.

இந்த நிலையங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதன் ஊடாக மொறட்டுவ பிரதேசத்தை அதி சிறந்த மர உற்பத்திகளை வடிவமைக்கும் பிராந்தியமாக ஸ்தாபித்தல், இலங்கையில் சிறிய வெட்டுமர உற்பத்தியாளர்களை மீள சீர்படுத்துதல் மற்றும் உயர்த்துதல், பயிற்சி, அறிவு மற்றும் தொழில் நுட்பத்திற்கு மாறுதல் என்பவற்றின் ஊடாக ஆற்றல் விருத்தி, இலங்கை வெட்டுமர வடிவமைப்புக்காக அடையாளம் காணப்பட்ட சிறந்த வணிகப் பெயரை உருவாக்கி வெட்டுமர கைத்தொழிலில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை புலமைச் சொத்து ஊடாகப் பாதுகாத்தல், இலங்கை வெட்டுமரம் மற்றும் வெட்டு மரங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளுக்கான எற்றுமதி சந்தை வாய்ப்புகளை உயர்ந்த தரத்திற்கு மேம்படுத்துதல், போன்ற நீண்ட கால பெறுபேறுகளை அமைச்சு எதிர்பார்க்கிறது. வெட்டுமரம் மற்றும் வெட்டு மரங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளுக்கான மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்தல், பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு புத்தாக்க வெட்டுமர உற்பத்தியை அதிகரித்தல் போன்ற நீண்ட கால பெறுபேறுகளை அடைய அமைச்சு எதிர்பார்க்கிறது.

இந்த கருத்திட்டத்தின் வெற்றிகரமான அமுலாக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் (COSTI) கீழ் இயங்குகின்ற விஞ்ஞானத்திற்கான இணைப்பாக்க செயலகம் மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கிடையில் முத்தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது. அமைச்சின் செயற்பாட்டு திட்டத்தில் வெட்டுமரக் குற்றிகளை வடிவமைக்கும் புத்தாக்க நிலையம் (TDIC) வெட்டுமரக் குற்றிகளைப் பதனிடும் புத்தாக்க நிலையம் (TPIC) என்பவற்றின் கீழ் அடையாளம் காணப்பட்ட சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு குறித்த பல்கலைக்கழகங்களுக்கு நிதியம் வழங்கப்பட்டுள்ளது.

வெட்டுமரக் குற்றிகளை வடிவமைக்கும் புத்தாக்க நிலையத்தின் (TDIC) கீழ் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெட்டுமரக் குற்றிகளைப் பதனிடும் புத்தாக்கம் பற்றி 4 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் அனைத்து மட்டத்திலுமான வெட்டுமர கைத்தொழிலாளர்களுக்கான இணையவழி மேடையொன்றை அமைப்பதற்குத் தயாராக இருக்கிறது.

இந்த முன்னெடுப்புடன் இணைந்ததாக சர்வதேச வெட்டுமர அமைப்பின் (ITTO) அங்கத்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ளுவதற்கு இலங்கைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

503A8419Project map

இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகம் (ளுடுஐயுவுநு) பட்டமளிக்கும் கல்வி நிறுவகமாக மாற்றப்படும் - அமைச்சர் திலங்க சுமதிபால உறுதியளித்தார்

இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகம் (ளுடுஐயுவுநு) பட்டமளிக்கும் கல்வி நிறுவகமாக மாற்றப்படும் என தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவக (ளுடுஐயுவுநு) கல்வி சார்ந்த பணியாட் தொகுதியினர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது நிறுவகத்தின் அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கவனம் செலுத்தியபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

'இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகத்;தை (ளுடுஐயுவுநு) காட்டில் மலர்ந்த மலருக்கு ஒப்பிடலாம். இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின்; (ளுடுஐயுவுநு) திறன் பொருளாதார அபிவிருத்திக்கு அதிக பெறுமதியை சேர்த்த போதிலும் அதிலிருந்து சரியான பயன்பாடு பெறப்படவில்லை என்பது எனது கருத்தாகும். அதனால், இந்த நிறுவகத்தை பட்டமளிக்கும் கல்வி நிறுவகமாக மாற்றி அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளேன். எமது பிள்ளைகள் வௌ;வேறு விதமான உள்முகங்களையும் வெளிப்பார்வைகளையும் கொண்டுள்ளார்கள். அதனால் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 19 கல்வி நிறுவகங்களில் கற்பிக்கப்படுகின்ற பாடங்களின் எண்ணிக்கையை அவர்களுடைய தேவைக்கேற்ப 60 முதல் 80 வரை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இந்த நிலையை அடைவதற்கு அனைத்து பௌதிக வளங்களையும் வழங்குவதில் நாம் ஈடுபட்டுள்ளோம். 'இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகத்;தை (ளுடுஐயுவுநு) காட்டில் மலர்ந்த மலருக்கு ஒப்பிடலாம். இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின்; (ளுடுஐயுவுநு) திறன் பொருளாதார அபிவிருத்திக்கு அதிக பெறுமதியை சேர்த்த போதிலும் அதிலிருந்து சரியான பயன்பாடு பெறப்படவில்லை என்பது எனது கருத்தாகும். அதனால், இந்த நிறுவகத்தை பட்டமளிக்கும் கல்வி நிறுவகமாக மாற்றி அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளேன். எமது பிள்ளைகள் வௌ;வேறு விதமான உள்முகங்களையும் வெளிப்பார்வைகளையும் கொண்டுள்ளார்கள். அதனால் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 19 கல்வி நிறுவகங்களில் கற்பிக்கப்படுகின்ற பாடங்களின் எண்ணிக்கையை அவர்களுடைய தேவைக்கேற்ப 60 முதல் 80 வரை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இந்த நிலையை அடைவதற்கு அனைத்து பௌதிக வளங்களையும் வழங்குவதில் நாம் ஈடுபட்டுள்ளோம். 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் பட்டமளிப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ள அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் எனடபவற்றுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுவதன் ஊடாக இந்த நிறுவகத்தை தரமுயர்த்திக்கொள்ள முடியும். இலகுவாக பட்டம் பெறும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய பல பாடங்களை ஆரம்பித்து இந்த பணியை முன்னெடுப்பதற்கு நாம் ஆகக்கூடிய முயற்சிகளை எடுப்போம்.

இந்த நிறுவகத்தில் கற்பிக்கப்படுகின்ற பாடங்களின் விடயப்பரப்பு தொழில்நட்ப துறையை நோக்கி இற்றைப்படுத்தப்பட வேண்டும். இதற்காக எமது அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஆராய்ச்சி நிறுவகங்கள் புதிய ஆராய்சியில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி கூட்டிணைய முடியும். இது நிறுவகத்திற்கு அதிக பெறுமதியைக் கூட்டுவதை இலகுவாக்குகின்றது.

இந்த பணியை நிறைவேற்றுவதில் ஆரம்ப நடவடிக்கையாக, அடுத்த இரண்டு வார காலத்தில் அனைத்து பங்கீடுபாட்டாளர்களையும் அழைத்து கொள்கை சம்பந்தமாக கவனம் செலுத்தி ஒரு மூலோபாய திட்டம் தயாரிக்கப்படும். இந்த மூலோபாய திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய செயல்முறைக்கு அமைவாக நிறுவகத்திற்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இது இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தை (ளுடுஐயுவுநு) தரமுயர்த்துவதற்காக நீண்ட காலம் காத்திருந்த சந்தர்ப்பமாகும். பொருளாதார அபிவிருத்திக்கு எதிர்கால சந்ததியினரை தொழில்நுட்பத்துடன் வலுவூட்ட வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்ற அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இது இலகுவில் அடையக்கூடிய பணியாக இருக்கின்றது. 

இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகம் (ளுடுஐயுவுநு) பட்டமளிக்கும் கல்வி நிறுவகத்தை என்ற நிலைக்கு தரமுயர்துவதன் மூலம் நாமது நாட்டு பணம் வெளிநாடுகளின் கைகளுக்குச் செல்லுவதைக் குறைத்துக்கொள்ள முடியும்' என்று குறிப்பிட்டார். 

மேலும் இந்த நிறுவகத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு எந்த தடையும் ஏற்படாமல் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு ஒத்ததாக எதிர்காலத்தில் சேர்க்கப்படுகின்ற மாணவர்களுக்கு பட்டமளிக்கின்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகமாக மாற்றப்படும் என்பதையும் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின்போது கல்விசார் பணியாட் தொகுதியினர் சங்கத்தின் பிரதிநிதிகள் தொழில் ரீதியாக அவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளையும் வசதியீனங்களையும் முன்வைத்தனர். இந்த நிறுவகத்தின் அபிவிருத்தியுடன் இந்த பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதாக அமைச்சர் உறுதி கூறினார். 

அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக லொகுஹெட்டி, பேராசிரியர் ஜனித லியனகே, கலாநிதி அரோஷh பெர்னாந்து ஆகியோர் உட்பட இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவக (ளுடுஐயுவுநு) அதிகாரிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

503A1410 1503A1393

 

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் கௌரவ அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா, தொழில்நுட்ப புத்தாக்க கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு. திலங்க சுமதிபால ஆகியோரின் பங்கேற்பின் கீழ் இன்று (26.12.2019) காலை யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டரங்கில், ஒன்பது வருடங்களுக்குப் பின் இலங்கையில் தென்பட்ட கோள சூரிய கிரகணத்தை (முழு சூரிய கிரகணம்) அவதானிக்கும் முகாம் நடத்தப்பட்டது.

இதற்கு முன் சூரிய கிரகணம் 2010ஆம் ஆண்டு தோன்றிது. அடுத்த சூரிய கிரகணம் 2031ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி தோன்றவிருப்பதால் இது இலங்கை வாழ் பொதுமக்களுக்கு மிகவும் விசேடமான நிகழ்வாகும். இது வட பகுதியில் தெளிவாக தென்படுவதன் காரணமாக அப்பகுதியில் பல அவதானிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சியில் உள்ள பொறியியல் பீடம் மற்றும் முல்லைத்தீவு கரையோரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன.

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக லொகுஹெட்டி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பி. இரவிராஜனா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1

உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய விஞ்ஞான மன்றத்தினால் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மன்றத்தின் வருடாந்த விருது வழங்கும் விழா 2019ஆம் டிசம்பர் 18ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கௌரவ அமைச்சர் திரு. பந்துல குணவர்தன மற்றும் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கௌரவ அமைச்சர் திரு. திலங்க சுமதிபால ஆகியோரின் பங்கேற்பில் நடைபெற்றது. தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நிதியுதவி அளிக்கப்பட்டு விஞ்ஞான முன்னேற்றத்திற்காக ஆராய்ச்சி செய்கின்ற தனித்துவமான ஆராய்ச்சியாளர்களைப் பாராட்டுவதையும் ஆராய்ச்சி மானியங்கள் பெறுகின்றவர்கள் விஞ்ஞான ஆராய்ச்சியில் தொடர்ச்சியாக உயர் தரத்தைப் பேணுவதற்கு செயலூக்கமளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த விருது வழங்கும் விழா வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்றது.

பிரதானமாக நான்கு வகைகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஆராய்ச்சி விருதுகள், தேசிய விஞ்ஞான மன்றத்தின் தொழில்நுட்ப விருதுகள், உலக விஞ்ஞான கல்வி நிறுவகத்தினால் வழங்கப்படுகின்ற இளம் விஞ்ஞானி விருது மற்றும் தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்பு மேற்பார்வை திட்டத்திற்கான உதவி ஆகிய  திட்டங்களின் கீழ் மொத்தமாக 26 ஆராய்ச்சி கருத்திட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஆராய்ச்சி விருதுகள் வகையின் கீழ்,  பொறியியல் துறை, சுகாதார விஞ்ஞானம், உயிரியல் தொழில்நுட்பம், தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நிதியுதவி அளிக்கப்படுகின்ற அடிப்படை விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் உயிர் பல்வகைமை கருத்திட்டங்கள் ஆகியவற்றிற்கு ஐந்து விருதுகள் வழங்கப்பட்டன. புத்தாக்க நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் தொழில்நுட்ப மானியம் பெறுபவர்களின் பங்களிப்பை மதிப்பதற்காக தொழில்நுட்ப விருதுகள் வகையின் கீழ் உள்ள கருத்திட்டங்களில் வெற்றிகரமான ஒரு கருத்திட்டத்திற்கு சாதனை விருது வழங்கப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் கலாநிதி ரனில் ஜயவர்தனவுக்கு உயிரியல், இரசாயனம், கணிதம் மற்றம் பௌதிகவியல் ஆகிய துறைகளில் அதிசிறந்த திறமைகளைக் காட்டிய இளம் விஞ்ஞானிகளுக்காக தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் உலக விஞ்ஞான கல்வி நிறுவகம் என்பவற்றினால் வழங்கப்பட்ட இளம் விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டது. பட்டப்பின்படிப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு பல்கலைக் கழகங்களையும் ஆராய்ச்சி நிறுவகங்களையும் ஊக்குவிப்பதையும் செயலூக்கப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு மேற்பார்வையாளர்கள் குழாத்திடமிருந்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பட்டப்பின்படிப்பு மாணவர்களை மேற்பார்வைசெய்த விஞ்ஞானிகள்கல்விமான்கள் 12 விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

விருது வழங்கும் விழாவில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மலிக் ரனசிங்க "ஆராய்ச்சியின் இலாபங்கள்" என்ற தலைப்பில் பிரதான உரையை நிகழ்த்தினார். கூட்டத்தில் உரை நிகழ்த்திய கௌரவ அமைச்சர் திரு. பந்துல குணவர்தன: 'அதிமேதகு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் ஆராய்ச்சிக்காக மொத்த தேசிய உற்பத்தியிலிருந்து அதிக நிதியத்தை ஒதுக்க வேண்டும் என்ற கருத்தைக்கொண்டுள்ளது எனவும், நாட்டின் அபிவிருத்திக்கு மனித வள அபிவிருத்தி பெரிதும் நன்மை பயக்கும் என தனது அனுபவத்தைக் கொண்டு நம்புவதாகவும். புதிய தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் புத்தாக்க சிந்தனைகள் மூலம் நாட்டை அபிவிருத்திசெய்யவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் முடியும் எனவும், அதனால் குறுகிய காலத்தில் அரசாங்கத்திற்குக் கிடைக்கக்கூடிய வளங்களைக்  கொண்டு விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் என்பவற்றிற்கு முன்னுரிமையளித்து எதிர்கால அபிவிருத்தியை ஆராய்ச்சி செய்யும். விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தமது கண்டுபிடிப்பு முடிவுகளை சந்தைப்படுத்த வேண்டும் எனவும் அதன் மூலம் எமது வளங்களுக்கு அதிக பெறுமதியைக் கூட்டுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்' எனவும் கூறினார்.

கௌரவ அமைச்சர் திரு. சுமதிபால உரையாற்றும்போது: "எமது நாட்டில் அரசாங்கத்தின் பக்கத்தில் ஆராய்ச்சிக்கு கவனம் செலுத்துவது குறைவாக இருக்கிறது. எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம் முதல் முறையாக தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்திற்கான தனியான அமைச்சு ஒன்றை ஸ்தாபித்துள்ளது. தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க திறனுடன் நாட்டை சிறந்த அபிவிருத்தியுள்ள நாடாக மாற்றுவதற்குத் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நோக்கத்திற்கு அமைவாக இருந்தது. அரசியல் சார்பற்ற தலையீட்டின் ஊடாக முதல் முறையாக அரச தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றார். நமது நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு எங்களுக்கு உதவக்கூடிய பிரதான காரணிகளை நாங்கள் அடையாளம் காண வேண்டும். தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சு தொழில்சார்ந்த அணுகுமுறையின் ஊடாக விஞ்ஞானிகளை ஆகக்கூடியளவில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் ஊடாக இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதற்கு நாம் அரசாங்கத்தை சம்மதிக்கச் செய்ய வேண்டும்.' எனக் குறிப்பிட்டார். கௌரவ அமைச்சர் திரு. சுமதிபால உரையாற்றும்போது: 'எமது நாட்டில் அரசாங்கத்தின் பக்கத்தில் ஆராய்ச்சிக்கு கவனம் செலுத்துவது குறைவாக இருக்கிறது. எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம் முதல் முறையாக தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்திற்கான தனியான அமைச்சு ஒன்றை ஸ்தாபித்துள்ளது. தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க திறனுடன் நாட்டை சிறந்த அபிவிருத்தியுள்ள நாடாக மாற்றுவதற்குத் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நோக்கத்திற்கு அமைவாக இருந்தது. அரசியல் சார்பற்ற தலையீட்டின் ஊடாக முதல் முறையாக அரச தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றார். நமது நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு எங்களுக்கு உதவக்கூடிய பிரதான காரணிகளை நாங்கள் அடையாளம் காண வேண்டும். தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சு தொழில்சார்ந்த அணுகுமுறையின் ஊடாக விஞ்ஞானிகளை ஆகக்கூடியளவில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் ஊடாக இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதற்கு நாம் அரசாங்கத்தை சம்மதிக்கச் செய்ய வேண்டும்." எனக் குறிப்பிட்டார். 

உயர் கல்வி, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் திரு. அநுர திசாநாயக்க, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக எஸ். லொகுஹெட்டி, தேசிய விஞ்ஞான மன்றத்தின் பதிற் கடமையாற்றும் தலைவி திருமதி. நந்தனி சமரவிக்கிரம, தேசிய விஞ்ஞான மன்றத்தின் பணிப்பாளர் நாயகம்  பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன ஆகியோர் உட்பட கௌரவ அழைப்பாளர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1

உயர் கல்வி, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சின் கீழ் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தினால் (ஐவுஐ) ஒழுங்குசெய்யப்பட்ட நான்காவது பையனியல் ஆராய்ச்சி கருத்தரங்கு 2019.12.17ஆம் திகதி மாலபேயில் அமைந்துள்ள கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வை கௌரவ உயர் கல்வி, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் திரு. பந்துல குணவர்தன, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு.திலங்க சுமதிபால ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். 'நிலைபேறான அபிவிருத்திக்கு அதிசிறந்த விஞ்ஞானம், தொழில்நட்பம் மற்றும் புத்தாக்கம்' என்பது இந்த வருட மகாநாட்டின் தொனிப்பொருளாகும். மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரங்கிக ஹல்வத்துர மகாநாட்டின் பிரதான உரையை நிகழ்த்தினார். மேலும் இந்த மகாநாட்டில் விசேட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய அறிவை சமூகமயப்படுத்திய மற்றும் தேசிய மட்டத்தில் விருதுகளை வென்ற கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக லொகுஹெட்டி, மேலதிக செயலாளர் திருமதி. நந்தனி சமரவிக்கிரம, தெற்கில் நிலைபேறான அபிவிருத்திக்கான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்பற்றிய ஆணைக்குழவின் நிறைவேற்று பணிப்பாளர் (ஊழுஆளுயுவுளு) கலாநிதி சைதி ஜூனைட், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் பதிற் கடமையாற்றும் தலைவர் திருமதி. சுரெகா ஹேவகே, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ராதிகா சமரசேகர ஆகியோர் உட்பட பெருந்திரளானோர் இந் கிகழ்வில் கலந்துகொண்டனர்.

1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1