விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறை மற்றும் பொதுமக்கள் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்காகவும், தொழில் நுட்பத்தை மக்களுக்கு கொண்டு வருவதற்காகவும், "ஷில்ப சேனா" திட்டத்தின் செயற்பாட்டு மாதிரியை உருவாக்குவதல் தொடர்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. கௌரவ விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர், செயலாளர் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் இவற்றோடு இணைந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.