NERD

NERD குறைந்த செலவு கட்டிட தொழில்நுட்பத்திற்கு அமைவாக என்னுடைய வீட்டைக் கட்டிக்கொள்ளுவது எப்படி?

NERDC அத்திவார கட்டகம், துண்டு வடிவிலான சுவர்கள், மண் சிமெந்து செங்கல் சுவர்கள், NERDC கன்கிறீட் தட்டுகள் கன்கிறீட் கதவு யன்னல் சட்டகங்கள் என்பவை நிர்மாண செலவில் 25% - 30% சேமிக்கின்றன. இது தாங்கக்கூடிய விலைகளுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு சுருக்கமான திட்டத்தைப் பெற NERDC அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுடன் தொடர்புகொள்ளவும்.

NERD நிலையத்திலிருந்து தொழில்நுட்பத்தை இடமாற்றிக்கொள்ளுவது எப்படி?

தமது புதிய வியாபாரங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்ற பொறுப்புமுயற்சியாளர்களின் நன்மைக்காக இடம் மாற்றுவதற்கு 25 தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. மேலதிக விபரங்களுக்கு +94 112 234 266 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது என்ற இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்.

NERDC யால் விருத்திசெய்யப்பட்ட உற்பத்திகளை வாங்குவது எப்படி?

NERDCயால் விருத்திசெய்யப்பட்ட உற்பத்திகளைத் தயாரிப்பதற்கு அனுமதி பெற்ற 36 நிறுவனங்கள் இருக்கின்றன. கொள்வனவு செய்வதற்கு NERDC யின் அனுமதி பெற்றவர்கள் பட்டியலைப் பார்க்கவும்.

மண் சிமெந்து கட்டிகளை (புளொக்) வாங்குவது எப்படி?

இவை சூழல் நேயம் கொண்டவை. சுகாதார தொல்லைகள் அற்றவை. அத்துடன் ஒப்பீட்டு ரீதியில் விலை குறைந்தவை. கொள்வனவுசெய்வதற்கு NERDCயின் இணையத்தளம் ஊடாக NERDC அனுமதி பெற்றவர்களுடன் தொடர்புகொள்ளவும்.

NERD நிலையத்தினால் நடத்தப்படுகின்ற பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் நான் கலந்துகொள்ளுவது எப்படி?

செலவு குறைந்த கட்டிட தொழில்நுட்பம், சிமெந்து மண் கட்டிகள் (புளொக்) தயாரிப்பு பயிற்சி நிகழ்ச்சித்திட்டம், CAD/CAM பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களாக இருக்கின்றன. மேலதிக விபரங்களுக்கு +94 112 234 266 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது என்ற இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்.

NIFS

NIFS என்றால் என்ன, அது எங்கே அமைந்திருக்கிறது மற்றும் NIFSஇன் குறிக்கோள் யாது?

NIFS என்பதன் அர்த்தம் அடிப்படை கற்கைகளுக்கான தேசிய நிறுவனம் என்பதாகும். இது இலங்கை, கண்டி, ஹந்தான குன்றில் அமைந்துள்ளது. கூகுல் வரைபடத்தைக் காண்க: https://goo.gl/maps/ctSVLXatDhH2

நோக்கம்: அறிவியல் அறிவு, மனித வளங்கள் மற்றும் தேசிய அபிவிருத்தி என்பவற்றின் மேம்பாட்டுக்காக அடிப்படை கற்கைகளின் உயர் ஆராய்ச்சியில் ஈடுபடுதல், முன்னெடுத்தல் மற்றும் மேம்படுத்துதல்.

NIFS ஏன் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது?

ஒரேயொரு ஆராய்ச்சி நிறுவனம் என்ற வகையில், அதன் சட்டத்தினால், ஆராய்ச்சியில் ஈடுபடுவதை பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அடிப்படை கற்கைளுக்கான தேசிய நிறுவனம் 1981ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இலங்கை விஞ்ஞான ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. மேலும் அது 'தேசிய அபிவிருத்திக்கான அடிப்படை ஆராய்ச்சி' தொடர்பாக பாரியளவில் வலுவூட்டியுள்ளது. தேசிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இறுதியில் பயனுள்ளவகையில் பயன்படுத்துவதற்கு வழிகாட்டுகின்ற அடிப்படை ஆராய்ச்சியை வழங்குவதற்காக விஞ்ஞான ரீதியில் நிறைவேற்றுவதற்கு இந்த கருத்திட்டங்கள்; கவனமாகத் திட்டமிடப்படுகின்றன. விஞ்ஞான உயர்வுக்காக NIFS ஏனைய பல அரசதுறை மற்றும் தனியார்துறை அமைப்புகள் மற்றும் பிரபல்யம்வாய்ந்த சர்வதேச நிறுவனங்கள் என்பவற்றுடன் கூட்டிணைகின்றது. மேலும் திறன்விருத்திக்காக இளம் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயிற்சியளித்தல் மற்றும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை விஞ்ஞான சமூகத்திற்கும் வழங்குதல் என்பவை உறுதிப்படுத்தப்படுகின்றன. அதன் தனித்துவமான ஆராய்ச்சி வசதிகளுடனும் உயர் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்ற தகுதிவாய்ந்த ஆராய்ச்சி உத்தியோகத்தர்களுடனும் NIFS அதன் எதிர்கால முயற்சிகளில் உயர்ந்த நிலையை அடைவதை குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றது.

பிரதான ஆராய்ச்சி துறைகள் யாவை?

ஆறு ஆராய்ச்சி அலகுகளின் கீழ் 20க்கு மேற்பட்ட ஆராய்ச்சி கருத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன,

(i) வலுசக்தி மற்றும் உயர் பொருட்கள்

(ii) கோட்பாட்டு பௌதிகம் மற்றும் கணிப்பீட்டு கற்கைகள்

(iii) இயற்கை உற்பத்திகள் மற்றும் உணவு இரசாயனம்

(iv) நுண்ணுயிரியல் மற்றும் காபன் தொடர்கள்

(v) புவி, சூழலியல் மற்றும் உயிர் தொழில்நுட்பம்

(vi) சூட்சும உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்பம்

என்னுடைய விஞ்ஞான அறிவை வளர்;த்துக்கொள்ள NIFS வழங்குகின்ற நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை?

ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, விஞ்ஞான சமூகத்திற்கு விஞ்ஞான தகவல்களைப் பரிமாற்றுவதில் கவனம் செலுத்துகின்றது. அத்துடன் விஞ்ஞானத்தைப்பற்றிய பொதுமக்களின் புரிந்துணர்வை மேம்படுத்துகின்றது. NIFS மகாநாடுகள், செயலமர்வுகள், ஆய்வுகூட கூட்;டத் தொடர்கள்பற்றிய பிரசுரங்கள், விஞ்ஞான முகாம்கள் மற்றும் அநேகமான மின்-கருத்திட்டங்கள் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறது.

நான் NIFSஇல் இணைவது எப்படி?

நீங்கள் எமது ஆராய்ச்சி குழுவுடன் பல மட்டங்களில், அதாவது, விஞ்ஞானிகள், ஆராய்ச்சி கூட்டு இணைப்பாளர்கள், ஆராய்ச்சி உவியாளர்கள், பட்டப்பின்படிப்பு/பட்டப்படிப்பு மாணவர்கள் என்ற வகையில் ஆராய்ச்சி கருத்திட்டங்களை மேற்கொள்ளுவதற்கும் பல்கலைக்கழக பயிலுனராக அல்லது கல்வி சாராத பணியாட் தொகுதி அங்கத்தவராக இணைய முடியும்.
மேலதிக விபரங்களுக்கு NIFS இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கலாம்.

NSF

என்னுடைய ஆராய்ச்சிக்கு வினைத்திறன்மிக்க வகையில் உள்ளூரில் உருவாக்கப்பட்ட விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வெளியீடுகளை நான் பெற்றுக்கொள்ளுவது எப்படி?

NSFஇன் தேசிய விஞ்ஞான நூலகம் மற்றும் வள நிலையம் (NSLRC) உள்நாட்டு வி-தொ ஆக்கங்களை இணையவழியில் பரப்புகின்ற முன்னணி நிறுவனமாகத் திகழ்கின்றது.

ஆராய்ச்சியாளர்கள் அணுகக்கூடிய பல வள தளங்கள் வருமாறு,:

  • கைத்தொழில் களஞ்சியங்களின் தேசிய வலையமைப்பு - அனைத்து இலங்கை களஞ்சியங்களுடன் தொடர்புடைய கல்விசார்ந்த மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை பொது அணுகல் ஊடாகத் தேடிக்கொள்ள முடியும் - http:/dl.nsf.ac.lk.ohs
  • இணையவழி இலங்கை சஞ்சிகைகள் (SLJOL) - சமகாலத்தில் மீளாய்வுசெய்யப்பட்ட 73 இலங்கை சஞ்சிகைகளின் முழுமையான பிரதிகளை அணுகுவதற்கு இணையவழி சேவையாக சேவையாற்றுகிறது.
  • விதுநெத ஒருங்கிணைக்கப்பட்ட தரவுத்தள கட்டகம் - விதுநெத ஊடாகத்த தேவைப்படும் தகவல்களை நிறைவுசெய்வதற்கு viduketha.nsf.ac.lk ஊடாக NSLRC யினால் பராமரிக்கப்படுகின்ற பல தேசிய மட்டத்திலான இணையவழி தரவுத்தளங்களை அணுக முடியும்.
  • SCOPUS, TEEAL, HINARI, AGORA, OARE மற்றும் ADRI போன்ற சர்வதேச தரவுத்தளங்களை இலவசமாக அணுகுவதற்கு வசதிசெய்துகொடுத்தல்.

தேசிய விஞ்ஞான மன்றத்தின் சஞ்சிகைக்கு அல்லது இலங்கையின் சமூக விஞ்ஞான சஞ்சிகைக்கு கையேடுகளை வழங்குவதற்கு இறுதி திகதி உண்டா?

வருடத்தின் எந்த நாளிலும் கையேடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.

மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து தேசிய விஞ்ஞான சஞ்சிகைக்கு அல்லது இலங்கை சமூக விஞ்ஞான சஞ்சிகைக்கு விஜயம்செய்க.

தொழில்நுட்ப மானியத்திற்கு ஆகக்கூடிய மேலெல்லை யாது?

தீர்மானிக்கப்பட்ட மேலெல்லை கிடையாது.

தேசிய விஞ்ஞான மன்றத்தின் பாடசாலை விஞ்ஞான கழகத்தில் நான் பதிவுசெய்துகொள்ளுவது எப்படி?

பாடசாலை அதிபர் ஊடாக பாடசாலை விஞ்ஞான கழகத்தின் நிகழ்ச்சித்திட்டம்பற்றி ஒழுங்காக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல். விண்ணப்ப படிவத்தை NSF இணையத்தளத்தில் அதாவது விஞ்ஞான/பாடசாலை விஞ்ஞான சங்க நிகழ்ச்சித்திட்ட பகுதியில், மும்மொழிகளிலும் பெற்றக்கொள்ள முடியும். விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் NSF பாடசாலை விஞ்ஞான சங்கத்திற்கு ஒரு பதிவு இலக்கத்தை வழங்கும். இது சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபருக்கு தபால்மூலம் அனுப்பிவைக்கப்படும்.

போட்டி ரீதியாக ஆராய்ச்சி மானியங்களுக்கான நிதியத்திற்கு மேலெல்லை யாது?

அப்படியொரு மேலெல்லை இல்லை. ஆனால் ஒவ்வொரு வரவுசெலவு திட்ட விடயம் நன்றாக நியாயப்படுத்தப்பட வேண்டும்.

தேசிய விஞ்ஞான மன்றத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முகாமைத்துவ தகவல் கட்டகத்தில் நான் பதிவுசெய்துகொள்ளுவது எப்படி?

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புபட்ட விடயத்தில் குறைந்பட்சம் பட்டம் இருந்தால் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் நீங்கள் STMISஇல் பதிவுசெய்துகொள்ள முடியும். இதில் பதிவுசெய்துகொள்ளுவதற்கு NSF இணையத்தளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் அல்லது உங்கள் கோரிக்கையை : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புக. முழுமையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். க்கு அனுப்புக. உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்ததன் பின்னர் NSF பதிவு விபரங்களை உங்களுக்கு அனுப்பிவைக்கும்.