விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி (STR) அபிவிருத்தி தொடர்பில் 2016ஆம் ஆண்டில் அமைச்சினாலும் அதன் நிறுவகங்களினாலும் முன்னெடுக்கப்பட்ட சிறப்பான விடயங்கள்.

சமுதாயத்திற்கான விஞ்ஞான தொழில்நுட்ப கருத்துக்களம் (STS கருத்துக்களம்)

இந்த கருத்தரங்கானது 2016 செப்டம்பர் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கொழும்பில் நடத்தப்பட்டது. இதன் ஆரம்ப விழா 2016 செப்டம்பர் 7ஆம் திகதி நடந்தது.

இந்த கருத்தரங்கை நடத்தியதன் பிரதான நோக்கம் உலக விஞ்ஞான தொழில்நுட்ப அபிவிருத்திகளிலிருந்து இலங்கை சமூகத்திற்கான வாய்ப்புகளை தேடி அறிவதற்குரிய வசதியை ஏற்படுத்துவது, இலங்கை சமூகத்தில் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் பங்களிப்பை கலந்துரையாடுதல் மற்றும் இலங்கை சமூகத்தில் விஞ்ஞான தொழில்நுட்பத்தை உள்வாங்குகின்றபோது இருக்கின்ற தடைகளைப் பகுப்பாய்வுசெய்தல் என்பவையாகும். இந்த கருத்தரங்கின்போது நிலையான அபிவிருத்தி இலக்குகளுடன் தொடர்புடைய தொனிப்பொருள்களாவன கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் பிரசைகளின் விஞ்ஞான அறிவியல், உயர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட தீர்வுகள், அடிப்படை அறிவு, உயர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட தீர்வுகள், அடிப்படை விஞ்ஞானம், விஞ்ஞான தொழில்நுட்ப புத்தாக்கத்த்தில் திறன் விருத்தி, விஞ்ஞான தொழில்நுட்ப நிதியிடல் மற்றும் இலங்கை புத்தாக்க மேடை போன்றவை குறிப்பாக ஆர்வம் காட்டப்பட்ட துறைகளாக எடுத்துக்காட்டப்பட்டன.

இந்த கருத்தரங்கில் ஜப்பான் STS கருத்திரங்கின் தலைவர் உட்பட முன்னணி சர்வதேச நிபுணர்களும் அமைப்புகளும், ஆசிய பசுபிக் நாடுகளுக்கான (ESCAP) சமூக பொருளாதார குழுசார் அதிகாரிகள், மற்றும் UNESCO, CERN போன்னறவற்றின் அதிகாரிகளும் பங்குபற்றினர்.

அதிமேதகு சனாதிபதி அவர்களும் ஏனைய சிறப்பு அதிதிகளும் இந்த வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர். இந்த வைபவத்தில் பல்கலைக்கழக மற்றுமம் பாடசாலை மாணவர்கள், கைத்தொழில் நிபுணர்கள், தொழில்நுட் நிபுணர்கள், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட 1500 அதிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 650 பேர், இதில் 100 பேர் வெளிநாடுகிலிருந்து வந்தவர்கள். அவர்களில் புலம்பெயர்ந்த திறமைமிக்க இலங்கை விஞ்ஞானிகளும் அடங்கியிருந்தனர். இலங்கையிலிருந்து பங்குபற்றியவர்களில் விஞ்ஞானிகள், அரசாங்க மற்றும் தனியார்துறை தொழில்நுட்ப நிபுணர்கள், கைத்தொழில் நிபுணர்கள், கண்டுபிடிப்பாளர்கள், புத்தாக்குநர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உள்ளூர் பாடசாலைகளின் உயர்தர மாணவர்கள் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

Captions:

     

ஏனைய நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகளின் கீழ் விஞ்ஞான தொழில்நுட்ப கூட்டிணைவு

இந்தோ ஸ்ரீ லங்கா விஞ்ஞான தொழில்நுட்ப கூட்டிணைவு

2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைச்சானது இந்தியாவின் விஞ்ஞான தொழில்நுட்ப திணைக்களத்துடன் கூட்டுறவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு (PoC) பிரவேசித்தது. இதில் இரு நாடுகளின் விஞ்ஞானிகளும் கூட்டிணைந்து ஆராய்ச்சிகளிலும் செயலமர்வுகளிலும் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒன்பது ஆராய்ச்சி கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் இடைத்தவணை மீளாய்வு கூட்டம் 2016ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி நடைபெற்றது. எட்டு கருத்திட்டங்களில் ஏழு கருத்திட்டங்கள் அரசாங்கங்களிலிருந்து நிதியுதவியைப் பெற்று 2016ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டன. ஒரு கருத்திட்டம் 2017ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

CERN

This session is under construction

இலங்கை சமுதாயத்திற்கான விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மகாநாடு (தேசிய விஞ்ஞான மன்றம் - NSF உடன் கூட்டிணைந்து)

பல்கலைக்கழகங்களுடன் கூட்டிணைதல்

FGS/ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட பல்துறைகள் அணுகுமுறைகள் 2016 எனும் சர்வதேச மகாநாட்டுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.

இலங்கை கட்டுப்பாட்டக புத்தாக்கத்திற்கான டேஷ் போர்ட் 2016 ஆம் ஆண்டுக்கான E-சுவாபிமானி விருதை விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்திற்கான கூட்டிணைப்பு செயலகமானது (COSTI) பெற்றது

நாட்டின் புத்தாக்கம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவை பற்றிய நடப்புத் தகவல்களை வழங்குவதற்கு இலங்கை புத்தாக்க கட்டுப்பாட்டகம் COSTIயால் அபிவிருத்தி செய்யப்பட்டது. இலங்கை புத்தாக்க கட்டுப்பாட்டகம் அரசாங்க விருதையும் ICTA வினால் வழங்கப்பட்ட E-சுவாபிமானி விருதையும் வென்றது.

தேசிய விஞ்ஞான நிலையம்

This session is under construction

நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவகம்

  • வரையறுக்கப்பட்ட Bio-Med சர்வதேச (தனியார்) நிறுவுனத்திற்கு தானியங்கி வைத்தியசாலை கட்டில்
  • தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபைக்கு (NWSDB) க்கு குழாம் காட்சிப்படுத்தல்
  • ஆளி பரிசோதனைக்காக உருளுகை பீப்பா ஒன்றை அபிவிருத்திசெய்தல்
  • ஆசியா மற்றும் பசுபிக்கிற்கு ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசுபிக் (UNESCAP) பொருளாதார சமூக ஆணைக்குழு மற்றும் - பிராந்திய விண்வெளி பயன்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் (RESAP), ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய விண்வெளி விஞ்ஞான தொழில்நுட்ப கல்விக்கான நிலையம் (CSSTEAP), ஆசிய - பசுபிக் பிராந்திய விண்வெளி முகவர் மன்றம் (APRSAF) மற்றும் விண்வெளி விஞ்ஞான தொழில்நுட்ப துறையில் இயற்கை மற்றும் கலாசார மரபுரிமைகளுக்கான (HIST) விண்வெளி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச நிலையம் என்பவற்றுடன் விண்வெளி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் ACCIMT தொடர்ந்து வேலைசெய்தது.
  • இலங்கையின் முதலாவது நெனோ செய்மதியின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புத் துறையில் தொழில்நுட்ப உதவிக்காக உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்துடன் தொடர்புகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் கருத்திட்டம் மீதான முதலாவது செயலமர்வு ரஷ்யாவின் சமாரா அரச விண்வெளி பல்கலைக்கழகத்துடன் கூட்டிணைந்து 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
  • சீனாவின் இயற்கை மற்றும் கலாசார மரபுரிமைகளுக்கான (HIST) விண்வெளி தொழில்நுட்பம் மீதான சர்வதேச நிலையம் மற்றும் தொலை இயக்கி கூர்உணர்வு மற்றும் டிஜிட்டல் புவி (RADI) நிறுவகம் என்பவற்றிலிருந்து சீன நிபுணர்களைக் கொண்ட அணியின் உதவியுடன் ACCIMT இல் மெய்மைநிலை தள நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது.

கைத்தொழில் தொழிலநுட்ப நிறுவகம்

  • மாலபேயில் மூலிகை மற்றும் உணவு தொழில்நுட்பத்திற்கான அதி உயர் தொழில்நுட்பவியல் வசதிகளை கொண்ட ஆய்வுகூடத்தை பூர்த்திசெய்தமை, புதிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டிடத் தொகுதியைப் (MRDC) பூர்த்திசெய்தமை
  • விவசாய இரசாயன பொருட்களால் அசுத்தமடைந்த கழிவுநீரை சுத்தப்படுத்துவதற்கான சூரிய உலை.
  • சிறுநீரக கலவைப் பிரிப்பு திரவத்தை உள்நாட்டில் உருவாக்கல்

  • நவீனமாக்கப்பட்ட KASPER விருத்திசெய்தல் மற்றும் தென்னங்கள் இறக்குதல் தொடர்பிலான பதப்படுத்தல்
  • உயர்ந்த அளவில் மாச்சத்தற்ற மற்றும் குளுடன் அற்ற வாழைப்பழ மாவானது கோதுமை மாவுக்கு மாற்றீடாக இனங்காணப்பட்டுள்ளது.
  • சோளம் மற்றும் மரவள்ளி என்பவற்றிலிருந்து குளுகோஸ் பாகு தயாரிக்கும் தொழில்நுட்பம்
  • எட்டு சுதேச துணை உயிர்ப்பொருள் பாலுக்குரிய அமில பக்டீரியா, லெக்டோபெசிலஸ் மற்றும் பெடியோகுக்குஸ் இனங்கள் தனிமைப்படுத்தப்பட்டு புளித்துப் பொங்கும் தினையிலிருந்தும் வாழைப்பழ வகைகளிலிருந்தும் இனம் காணப்பட்டுள்ள வகைகள் தொழில்நுட்ப மாற்றத்திற்குத் தயாராக இருக்கின்றன.
  • மாம்பழம் மற்றும் பப்பாசிப் பழங்களை நீண்ட நாட்களுக்கு களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக உயிரியல் மெழுகு உருவாக்கம்
  • உணவு மாதிரிகளில் உணவில் பொதிந்துள்ள நோய்த்தோற்ற வகைகளை கண்டறிவதற்காக நோயறியும் பரிசோதனையை அபிவிருத்தி செய்வதை முன்னெடுத்தல்
  • மனிதர்களுக்கு வெறிநாய் கடி நோய்ககான தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் குருதி மாதிரிகளில் வெறிநாய் கடி நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருப்பதை கண்டறிவதற்கான பரிசோதனையை அபிவிருத்தி செய்வதை முன்னெடுத்தல்

தேசிய எந்திரவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் (NERDC)

  • பால் கறக்கும் இயந்திரத்தை விருத்திசெய்தல்

கிராமிய பிரதேசங்களில் பாலுற்பத்தி கைத்தொழிலை வினைத்திறன் மிக்கவகையிலும் பயனுறுதிமிக்க வகையிலும் மேம்படுத்துவதற்கு கிராமிய பிரதேசங்களில் கையினால் பால் கறப்பதற்குப் பதிலாக கையினால் இயக்கக்கூடிய பால் கறக்கும் இயந்திரம் விருத்திசெய்யப்பட்டுள்ளது.

  • முற்கூட்டியே அழுத்தப்பட்ட கொன்கிறீட் சுவர்கள்

செலவு, நேரம், என்பவற்றைக் குறைப்பதற்காக சாதாரண செயற்பாடுகளில் மரபொழுங்கு சார்ந்த அமைப்பில் முன்னெடுக்கப்படும் சுவர் கட்டங்களுக்குப் பதிலாக (சல்லிக் கற்கள் மேசன் வேலை சுவர் மற்றும் மீள வலுப்படுத்தப்பட்ட சிமெந்து கொன்கிறீட் தொழில்நுட்பம் [R.C.C.]) முன்கூட்டியே அழுத்தப்பட்ட கொன்கிறீட் தொழில்நுட்ப சுவர் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • அப்பம் தயாரிக்கும் இயந்திரத்தை விருத்திசெய்தல்

இந்த இயந்திரம் றுகுணு பல்கலைக்கழகம் மற்றும் NERDC என்பவற்றுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் விசேட அம்சங்கள்: தக்க அளவு 350 அப்பங்கள்/மணித்தியாலம், உள்ளடக்க கொள்ளளவு - 200 அப்பங்கள், ஒவ்வொரு அப்பமும் தரத்தில் சமமாக இருக்கின்றது.

  • நீர்ப்பாசன திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வடிகால் கால்வாய்களில் தற்பொழுது கைகளால் களைகள் அகற்றப்படுவதால், களைகளை இயந்திரம்மூலம் அகற்றுவதற்காக NERDC ஒரு நீரியல் களை அகற்றும் கருத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது நேரத்தையும் தொழிலாளர் செலவையும் குறைக்கும்.

தேசிய அடிப்படை கற்கைகளுக்கான நிறுவகம் (NIFS)

  • சூரிய சக்தி கலன்களின் வினைத்திறனை உயர்த்துவதற்காக நெனோ துணிக்கை/நெனோ இழை/நெனோ துணிக்கை சேர்க்கை என மூன்று தட்டுகளை உடைய போட்டோனோடு வடிவமைக்கப்பட்டது.
  • திஸ்ஸமகரகம பிரதேசத்தில் ஒருவகை போஞ்சி பயிரிடுவதற்கு வெற்றிகரமான கள/செயல்முறைசார் பரீட்சார்த்த செயற்பாடுகளும் மற்றும் அம்பேவல பண்ணையில் பயறு தோலில் விலங்குணவு தயாரிப்பதற்கான கள/செயல்முறைசார் பரீட்சார்த்த சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தன. விலங்குணவு தானியமான எல்பா எல்பா பயிரினம் மற்றும் நிலக்கடலை பற்றிய கள பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.
  • இலங்கையின் இயற்கை காரீய படுகையை உயர்வாக சுத்திகரித்தல் மற்றும் இலங்கையின் இயற்கை காரீய படுகையை 99.99% சுத்திகரிப்பதற்கு விருத்திசெய்யப்பட்ட உத்திகள் மற்றும் அவற்றிலிருந்து காரீய ஒக்சைட் நெனோ பொருட்களை வெற்றிகரமாக சுத்திகரித்தல்.
  • லிதியம் அயன் மின்கல பயன்பாட்டுக்கு இலங்கை காரீயத்தின் மேற்தள சீர்படுத்தல் உத்திகளை அறிமுகப்படுத்தப்பட்டமை.
  • மைகோபக்டீரியம் காசநோய் சேர்க்கையில் rpoB, inhA மற்றும் katG வரிசைமுறை எனபவற்றைக் கண்டறிவதில் இலங்கை ஆக்கவுரிமை 17423 பெறப்பட்டுள்ளது.
  • எல்பா எமலேஸ் நடவடிக்கைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு சிறந்தமுறையொன்றை விருத்திசெய்தல்.
  • நகரசபை கழிவு திண்மங்களிலிருந்து உயிர்பல்வகைத் தன்மையின் புத்தாக்கம், இது கழிவு தொகையைக் குறைக்கிறது.
  • CKDu வில் Reverse Osmosis பொறித்தொகுதியிலிருந்து வெளியகற்றப்பட்ட கழிவு நீர் ஒழுங்கான முறையில் முகாமைத்துவம் செய்யப்படுவதற்கு கைத்தொழில் துறையின் துணை உற்பத்தி பொருளான உயிரியல் கரி மற்றும் ஏனைய குறைந்த செலவு பொருட்களை பயன்படுத்துவதுபற்றிய ஆராய்ச்சி.
  • வீட்டு பாவனைக்கானகுறைந்த செலவு நீர் வடிகட்டியை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டு வினைத்திறன்மிக்க நீர் சுத்திகரிப்புக்காக அதனுடன் சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் உள்ளூர் கனிப்பொருட்களை விருத்திசெய்வது பற்றிய புதிய துணை ஆராய்ச்சி கருத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
  • பூச்சிகளை அகற்ற இரசாயனம் சாராத பூச்சி தடுப்பு மற்றும் சேதனப் பொருட்கள் துரிதமாக உக்கிப்போவதற்காக பன்முக நுண்ணுயிரினங்களின் அபிவிருத்தி என்பவை தொடர்பில் உயர் போசாக்குடைய சேதன பசளையை விருத்திசெய்வதற்காக சார வாய்காலுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் (MoU) செய்துகொள்ளுதல்.
  • வாயுகோள கையுறை பெட்டி மற்றும் ஏனைய மின்கல பரிசோதனை பொருட்களைப் பெற்றுக்கொள்ளுவதன்மூலம் ஆய்வுகூட மின்கல பரிசோதனை வசதிகளை விருத்திசெய்வதற்கு ஆராய்ச்சிசெய்தல்.

தேசிய ஆராய்ச்சி பேரவை

  • இலக்கை நோக்கமாகக் கொண்ட பல்துறை ஆராய்ச்சி மானியங்களாவன:

நீரின் தரத்தை மேம்படுத்துதல், ஆரோக்கியமான உணவு, புதுப்பிக்கத்தகு வலுசக்தி உயிர் மருத்துவ எந்திரவியல், தேயிலை கைத்தொழிலை போட்டித்தன்மை மிக்கதாக்குதல் போன்றவை உள்ளடங்கிய 13 பகுதிகளின் கீழ் 2016ஆம் ஆண்டுக்கான ஆராய்ச்சி மானியங்கள் வழங்கப்படுகின்றன. டெங்கு நோயை பல வழிகளில் கட்டுப்படுத்துதல், நீண்ட நாட்களாக இருக்கும் சிறுநீரக நோய்களைத் தடுத்தல், விஷ-முறிவு மருந்தை விருத்திசெய்தல், காலநிலைக்கு ஈடுகொடுக்கும் நேர்த்தியான விவசாய-உத்திகள், பாலுற்பத்தியில் தன்னிறைவடைதல் என்பனவற்றில் முன்னேற்றங்களை மீளாய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

  • தனியார்துறை அரச கூட்டுச்சேர்தல் நிகழ்ச்சித்திட்டம்

NRCயின் தனியார்துறை அரச கூட்டுச்சேர்தல் கருத்திட்டம் (PPP) அதன் முதலாவது உற்பத்தியை வெற்றிகரமாக ஆரம்பித்தது. இது இலங்கையில் பழங்களில் ஈக்கள் மொய்க்கும் பிரச்சினையை சமாளிப்பதற்காக உள்ளூர் ரீதியாக கூட்டிணைக்கப்பட்ட பெரோமோன் பொறியாகும். இக்கருத்திட்டத்தின் பங்காளர்களாக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகமும் வரை CIC ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவகமும் இருக்கின்றன.

இரண்டாவது உற்பத்தியாக, உள்ளூர் ரீதியாக விருத்திசெய்யப்பட்ட மூக்கால் உறிஞ்சும் ஸ்பிரே. இது வர்த்தக ரீதியாக சந்தைப்படுத்துவதற்கு முன்னர் இறுதி பரிசோதனை நடவடிக்கைகளின் கீழ் இருக்கின்றது. இக்கருத்திட்டத்தின் பங்காளர்களாக மருத்துவ விஞ்ஞான பீடம், USJP மற்றும் வரையறுக்கப்பட்ட லினா உற்பத்தி தனியார் நிறுவனம் என்பவை இருக்கின்றன.

  • புலனாய்வாளர்களை செயற்படுத்தும் ஆராய்ச்சி மானியங்கள் நிகழ்ச்சித்திட்டம்

36 ஆராய்ச்சி மானியங்களுக்கு நிதியுதவியளிக்கப்பட்டது.

  • விஞ்ஞான வெளியீடுகளுக்கான ஜனாதிபதி விருது : PASP

PASP 2013ஆம் ஆண்டுக்குரிய நிகழ்ச்சியானது 2015 நவம்பர் மாதம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் 211 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ விஞ்ஞானம், பல்மருத்துவம், விவசாய விஞ்ஞானம், பொறியியல் போன்ற துறைகளில் திறமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தேசிய விஞ்ஞான மன்றம் (NSF)

  • போட்டிரீதியான ஆராய்ச்சி மானியங்கள்

அதிக ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுவதற்காக, 2016ஆம் ஆண்டில் போட்டிரீதியான ஆராய்ச்சி மானியங்கள் திட்டத்தின் கீழ் முதல் சுற்றில்; 23 மானியங்கள் வழங்கப்பட்டன. 7 MPhils மற்றும் 2 PhDs என்பவற்றுடன் 14 மானியங்கள் பூர்த்திசெய்யப்பட்டன.

  • பட்டப்பின்படிப்பு ஆராய்ச்சி புலமைப்பரிசு

7 MPhils மற்றும் 2 PhDs என்பவற்றுக்கு பத்து புலமைப்பரிசுகள் வழங்கப்பட்டன. 3 MPhils பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

  • NSF ஆராய்ச்சி உச்சி மகாநாடு 2016

இந்த "ஆராய்ச்சி உச்சி மகாநாடு: ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தினால் வலுவூட்டப்பட்டது". இது கொழும்பு, பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் யூலை மாதம் நடைபெற்றது. அனுபவங்களைப்பற்றி கலந்துரையாடுவதற்கும் பரிமாற்றிக்கொள்ளுவதற்கும், இனங்காணப்பட்ட துறைகளில் அண்மைக்கால முன்னேற்றங்கள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிவதற்கும் இந்த உச்சி மகாநாடு மேடையமைத்துக்கொடுத்தது.

  • NSF விருதுகள்

NSF விருதுகள் வழங்கும் வைபவம் 2015 நவம்பர் மாதம் பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஒரு NSF ஆராய்ச்சி விருது, ஆராய்ச்சி பட்டப்படிப்பு மேற்பார்வைக்கான துணைத் திட்டத்திற்கு (SUSRED) ஆறு விருதுகள், இரண்டு TWAS/NSF இளம் விஞ்ஞானிகள் விருதுகள், ஆறு தொழில்நுட்ப விருதுகள், ஒரு பாராட்டு சான்றிதழ் என்பன வழங்கப்பட்டன.

NSF Award Winners 2015

  • விஞ்ஞான தொழில்நுட்ப சாதனைகளுக்கான தேசிய விருதுகள் (NASTA விருதுகள்)

விஞ்ஞான தொழில்நுட்ப பயன்பாடுகள் ஊடாக சமூக பொருளாதார அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த திறமைமிக்க விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோரைப் பாராட்டுமுகமாக NASTA விருதுகள் வழங்கப்பட்டன.

  • தேசிய தொனிப்பொருள் ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டம் (NTRP)

விவசாயத்திற்கு தேசிய மென்பொருளைப் பயன்படுத்துவதற்காக இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட பயிர் எதிர்வுகூறல் கட்டகமொன்று NTRP மானியம் விவசாய அமைச்சினால் விருத்திசெய்யப்பட்டது.

  • புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வியாபாரத்தை ஆரம்பித்தல் மற்றும் மாற்றுதல் என்பவற்றிற்கு ஒரு மேடை அமைக்கப்பட்டது.

பின்வரும் ஆறு தொழில்நுட்பங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. அத்துடன் மேலதிக அபிவிருத்தி/ வர்த்தகமயப்படுத்தல் எனபவற்றுக்காக முதலீட்டாளர்கள்/ தொழில்நுட்ப செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் பங்கிகளர்களாவதற்குப் பொருத்தமான பின்னாய்வு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

  1. இலத்திரனியல் தயாரிப்பு கைத்தொழிலுக்காக தானியங்கி கண்பார்வை தொடர்பான பரிசோதனை (AOI) யுடன் ரோபோ கட்டகத்தை ஒட்டி பொருத்துதல்
  2. இறக்குமதிகளுக்கான பதிலீடாக சிறுநீரக குளுக்கோஸ் சொட்டுகளை விருத்திசெய்தல்
  3. உலர்நத இறப்பர் திறந்த கல உற்பத்தியின் தொடர்ச்சியான தயாரிப்புக்காக பரீட்சார்த்த - அளவிலான அச்சு தயாரிக்கிற இயந்திரம்
  4. 'COP சயுர': முப்பரிமாண கரையோர உயிர் வாழ் கட்டகம்
  5. பல்வேறு வகையான இயற்கை றபரை உலர்த்துவதற்கான வினைத்திறன்மிக்க தனி உலர்த்தி
  6. எல்லாம் ஒன்றில் உள்ள கணித பலகை

தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு (NASTEC)

  • விஞ்ஞான சமூகத்திற்கு இளம் விஞ்ஞானிகள் அவர்களுடைய ஆராய்ச்சி பணிகளைச் சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் அளிப்பதற்காக 4வது இளம் விஞ்ஞானிகள் மன்றத்தின் (YSF) ஆராய்ச்சி கருத்தரங்கு 2016 ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் 65 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அத்துடன் அவை கருத்திரங்கின் அறிக்கையில் வெளியிடப்பட்டன. ஏறக்குறைய 80 விஞ்ஞானிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்களின் ஒரு பகுதி

மெரிட் சான்றிதழ்களைப் பெறுதல்

  • தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சட்டகம் (NRDF) இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான சட்டகம் என்ற வகையில் அமைச்சரவை அமைச்சர்களால் அங்கீகரிக்கப்பட்டு 2016 மே மாதம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

ஒத்திசைவு மதிப்பீட்டுக்கான இலங்கை தராதரம் பெற்ற சபை (SLAB)

  • SLAB ஆனது பின்வரும் சர்வதேச அமைப்புகளில் அங்கத்தவராக இருப்பதோடு அவற்றில் பங்காளராக இருப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 4வது நிரல் 2015 செப்டம்பர் முதல் 2016 ஆகஸ்ட் இறுதி வரை பெற்ற சாவதேச அங்கீகாரத்தைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றது. செப்டம்பரில் நடத்தப்பட்ட சர்வதேச மற்றும் சமகால பிராந்திய மதிப்பீட்டின் பின்னர் SLAB ஆனது APLAC மற்றும் PAC அங்கத்துவத்தை வெற்றிகரமாத் தொடர்ந்தது.
  • GHG மெய்ப்பித்தல் மற்றும் செல்லுபடியாக்கும் நிறுவனங்கள் என்பவற்றின் தத்துவமளிப்பு ஆரம்பிக்கப்பட்டதோடு இரண்டு சான்றுப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு தத்துவமளிப்பு வழங்கப்பட்டது.
  • 2016 யூன் முதல் PAC MLA வின் அங்கத்தவராக SLAB அனுமதிக்கப்பட்டது.
  • நல்ல ஆய்வுகூட நடைமுறைக்கான (GLP) புதிய தத்துவமளிப்பு நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு தத்துவம் பெறுவதற்கான அளவுகோல் விருத்தி செய்யப்பட்டது.

இலங்கை புத்தாக்குநர்கள் ஆணைக்குழு (SLIC)

  • 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் ஆக்கவுரிமை பெற்ற புத்தாக்கங்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் வைபவம் 2016ஆம் ஆண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 11 துறைகளின் கீழ் 29 புத்தாக்கங்களுக்கு 31 விருதுகள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதியின் விருது விழா
  • 2016ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச புத்தாக்க கண்காட்சியில் ஏழு இலங்கை புத்தாக்குநர்கள் பங்குபற்றினர். அவர்கள் இரண்டு தங்கப்பதக்கங்கள், மூன்று வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.
  • "புத்தாக்குநர் உள்ளங்கள் 2016" தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்குத் தெரிவாகி நான்கு மாணவ புத்தாக்குநர்கள் கொரியா சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட்டில் (KIYO) மத்திய பிரிவில் பங்குபற்றி வெற்றிப் பரிசை வென்றெடுத்தனர்.
  • நான்கு மாணவ புத்தாக்குநர்கள் "புத்தாக்குநர் உள்ளங்கள் 2016" நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்குத் தெரிவாகி 2016 செப்டம்பரில் இந்தோனேசியாவில் நடைபெறும் சர்வதேச இளம் புத்தாக்குநர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கு பெயர்க் குறிக்கப்பட்டனர்.
சர்வதேச கண்காட்சியில் பங்குபற்றுதல்
  • இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவின் முதலாவது ஆணையாளரும் புத்தாக்குநரும், மாபெரும் இலங்கை பொறியியலாளருமான கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்க அவர்களின் பிறந்த நாளான ஒக்ரோபர் 26ஆம் திகதி தேசிய புத்தாக்குநர் தினமாக அமைச்சரவை அமைச்சர்களின் அங்கீகாரத்துடன் பிரகடனப்படுத்தப்பட்டது. தேசிய புத்தாக்குநர் தினம் 2016 ஒக்ரோபர் 26ஆம் திகதி கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்க அவர்களின் ஞாபகார்த்த முத்திரை வெளியீட்டுடன் கொண்டாடப்பட்டது.
  • இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழு (SLIC) அமைச்சரவை அமைச்சர்களின் அங்கீகாரத்துடன் புத்தாக்குநர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதை ஆரம்பித்தது.
  • சஹாசக் நிமவும் 2016 திறந்த, பல்கலைக்கழக மற்றும் மூன்றாம் நிலை கல்வி நிறுவகங்கள், வர்த்தகரீதியான புத்தாக்கங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகிய நான்கு வகைப்படுத்தலின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட மாகாண மற்றும் தேசிய மட்டத்திலான பங்கேற்புடன் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 89 திறந்த வகைப்படுத்தல்கள், 15 பல்கலைக்கழக மற்றும் மூன்றாம் நிலை கல்வி நிறுவகங்கள், 2 வர்த்தக புத்தாக்கங்கள் மற்றும் 199 பாடசாலை வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
சஹாசக் நிமவும் 2016
  • "புத்தாக்க உள்ளம்" என்ற மாணவ புத்தாக்குநர்களின் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி 2016 மே மாதம் தேசிய தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பப்பட்டது. இதன் நோக்கம் இளம் சந்ததியினர் மத்தியில் இலத்திரனியல் ஊடகத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளையும் புத்தாக்கங்களையும் ஜனரஞ்சகப்படுத்துவதாகும். நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற 76 விண்ணபப்ங்களில் தெரிவுசெய்யப்பட்ட 21 மாணவ புத்தாக்குநர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
"புத்தாக்க உள்ளம்" நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி

இலங்கை தரப்படுத்தல் நிறுவகம் (SLSI)

சான்றுப்படுத்தல் மற்றும் தத்துவப்படுத்தல் பகுதி வழங்கப்பட்ட சான்றிதழ்களின் எண்ணிக்கை
கட்டக சான்றுப்படுத்தல்
தர முகாமைத்துவ கட்டகம் (QMS (ISO 9001) 30
சூழலியல் முகாமைத்துவ கட்டகம் (EMS (ISO 14001) 09
உணவுப் பாதுகாப்பு முகாமைத்துவ கட்டகம் (FSMS (ISO 22000) 33
இடரார்ந்த பகுப்பாய்வு நெருக்கடி கட்டுப்பாட்டு முனை (HACCP) 18
நல்ல தயாரிப்பு நடைமுறை (GMP) 66
தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு சேவைகள் (OHSAS) 05
OHSAS மற்றும் வலுசக்தி முகாமைத்துவ கட்டகம் சான்றுப்படுத்தல் (OHSAS EnMs (ISO 50001) 07
மொத்தம் 168
உற்பத்தி சான்றுப்படுத்தல்  
SLS அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது 141
தரங்களின் அபிவிருத்தி பகுதி தரங்களின் எண்ணிக்கை
அனுமதிக்கப்பட்ட புதிய தரங்களின் எண்ணக்கை 153
செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற வரைவு தரங்களின் எண்ணிக்கை 117

வரை. இலங்கை நெனோ தொழில்நுட்ப (தனியார்) நிறுவகம் (SLINTEC)

நடத்தப்பட்ட மூலோபாய ஆராய்ச்சி கருத்திட்டங்கள்

  • டைட்டானியம் பற்றிய ஆராய்ச்சி

இந்த கருத்திட்டம் புதிய பிரிப்பு முறை ஊடாக இல்மனைட்டிலிருந்து டைட்டானியத்தைப் பிரித்தெடுக்கும் கருத்திட்டமாகும். SLINTEC 2017ஆம் ஆண்டில் பரீட்சார்த்த பொறித்தொகுதியை விருத்திசெய்யத் திட்டமிடுகிறது.

  • தோரியம் பற்றிய ஆராய்ச்சி

மொனோசைட் மணலிலிருந்து தோரியம் மற்றும் அரிதான புவி ஒக்சைட்டைப் பிரித்தெடுக்கும் கருத்திட்டமாகும். SLINTEC ஆய்வுகூட அளவிலான நடைமுறையை விருத்திசெய்துள்ளது. அதன் அடுத்த கட்டமானது அளவுகளை உயர்த்துவதாகும்.

  • செயற்கை இழை இரசாயனம்பற்றிய ஆராய்ச்சி

SLINTEC இந்த வருடத்தில் GLP சான்றுப்படுத்தலுக்கு விண்ணப்பித்துள்ளது. அத்துடன் செயலூக்கமுள்ள மருந்தாக்கல் அடங்குபொருள் தயாரிப்பு ஆற்றலை விருத்தி செய்வதில் செயலாற்றுகின்றது.

  • காபன் நெனோ இழைபற்றிய ஆராய்ச்சி

வலுவான மேம்படுத்தப்பட்ட பொருளாக அநேகமான கைத்தொழில்களில் பயன்படுத்தப்படுகின்ற காபன் நெனோ ரியுப் (CNT) நூல் அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்ற கருத்திட்டமாகும்.

  • காரீயம்பற்றிய ஆராய்ச்சி

இலங்கை vein காரீயத்திலிருந்து Graphene மற்றும் Graphene ஒக்சைட் உருவாக்குவது பற்றிய ஆராய்ச்சி கருத்திட்டம்.

2016 செப்டம்பர் மாதம் தொழில்நுட்ப அடைகாப்பு நிலையத்தின் (TIC) செயற்பாடுகளை ஆரம்பித்தது. இரண்டு வாடகை குடியிருப்பாளர்கள் ஏற்கனவே TIC இடத்தை அவர்களின் ஆராய்ச்சிகூடத்திற்குப் பயன்படுத்துவதற்கு உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர். ஒரு வாடகை குடியிருப்பாளர் ஏற்கனவே TIC இடத்தில் அவர்களின் ஆராய்ச்சிகூடத்தை நிறுவியுள்ளனர். செயல்திறனுள்ள புதிய சேவை பெறுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது.

2016ஆம் ஆண்டு SLINTEC யுன்னான் கிராமிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றல் சேவைகள் நிலையத்துடன் கூட்டிணைந்து அதி நவீன தொழில்நுட்ப முறைகளுடன் கூடிய அரச பசுமை இல்லத்தின் நிர்மாண பணிகளை ஆரம்பித்துள்ளது. பசுமை இல்லத்திற்கு சூரியசக்தியால் மின்சாரம் வழங்கப்படும். அத்துடன் பயிர் வளர்ச்சிக்காக புதிய தொழில்நுட்பம் என்றவகையில் காற்றில் வேர்கள் காய்த்தல் (எரோபோனிக்ஸ்) மற்றும் நீரில் விளைச்சல் (ஹைட்ரோபோனிக்ஸ்) என்பவற்றைப் பயன்படுத்தும்.

2016ஆம் ஆண்டு SLINTEC 4 சர்வதேச US ஆக்கவுரிமைக்கு விண்ணப்பித்துள்ளது. அதற்கு மேலதிகமாக, சர்வதேச ரீதியாகப் புகழ்பெற்ற சஞ்சிகைகளில் 12 ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. Forbes ஆசிய சஞ்சிகையில் 2016ஆம் ஆண்டு SLINTEC குறிப்பாக எடுத்துக்காட்டப்பட்டது.

2016ஆம் ஆண்டு அரசாங்க பண ஒதுக்கீடு

வகைகள் முதலீடு (ரூ. மில்லியன்.)
அமைச்சு 896.7
நிறுவகங்கள் 1354
வரவுசெலவு திட்ட முன்மொழிவின் ஊடாக அனுமதியளிக்கப்பட்ட விசேட கருத்திட்டங்கள் 550
மொத்தம் 2800.7
நிகழ்ச்சி Capital (Rs. Mn.)
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் (ITI) 531
நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் சி கிளார்க் நிறுவகம் (ACCIMT) 80
தேசிய எந்திரவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் (NERD Centre) 50
அடிப்படை கற்கைகளுக்கான தேசிய நிறுவகம் (NIFS) 140
தேசிய விஞ்ஞன மன்றம் (NSF) 250
தேசிய ஆராய்ச்சி மன்றம் (NRC) 230
தேசிய விஞ்ஞன மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு (NASTEC) 11
இலங்கை கட்டளைகள் நிறுவகம் (SLSI) 0
ஒத்திசைவு மதிப்பீட்டுக்கான இலங்கை தராதர சபை (SLAB) 2
இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழு (SLIC) 60
மொத்தம் 1354