shilpa sena12விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறை மற்றும் பொதுமக்கள் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்காகவும், தொழில் நுட்பத்தை மக்களுக்கு கொண்டு வருவதற்காகவும், "ஷில்ப சேனா" திட்டத்தின் செயற்பாட்டு மாதிரியை உருவாக்குவதல் தொடர்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. கௌரவ விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர், செயலாளர் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் இவற்றோடு இணைந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

russi12இலங்கையில் கிறைசோடில் அஸ்பெஸ்டஸின் பாதுகாப்பான பயன்பாட்டைப் பற்றி தீர்மானிக்க ஒரு பணிக்குழுவானது விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சினாலும் மற்றும் ரஷ்யாவின் யூரல் வர்த்தக சபையினாலும் இணைந்து நிறுவப்பட்டது. கொழும்பில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 4 வது கூட்டம் நடைபெற்றது. கெளரவ விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க பணிப்பாளர் குழுவை சந்தித்தார்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் அமைச்சராக பதவியேற்ற ​கௌரவ திரு சுஜீவ சேனசிங்க அவர்கள் தனது முதல் கட்ட பணியை செத்சிறிபாய முதலாம் கட்டத்தில் அமைந்துள்ள விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சில் 2018.12.28 அன்று காலை சகல மத பிரார்த்தனைகளுடன் ஆரம்பித்தார். இந்நிகழ்வின்போது பிரதி சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hon.Minis Assu Duty P1

 Hon.Minis Assu Duty P2

 Hon.Minis Assu Duty P3

 

china12கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்துடன் இணைந்து இணை உயிர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தை தாபிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் முன்னேற்றத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்கு யுனான் கிராமிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சேவை நிலையத்தின் பிரதிநிதிகள் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுஜீவ சேனசிங்க அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் புதிய செயலாளராக கௌரவ சின்தக எஸ். லொக்குஹெட்டி அவர்கள் இன்று காலை (2019.01.04) பத்தரமுல்ல செத்சிறிபாவில் அமைந்துள்ள விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இவர் 1990ஆம் ஆண்டு ஹபராதுவையில் உதவி பிரதேச செயலாளராக நிர்வாக சேவையில் இணைந்தது மட்டுமல்லாது இலங்கை வர்த்தக நிர்வாக சேவையின் சிறப்பு தர உத்தியோகத்தராவதோடு, தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறை, சர்வதேச வர்த்தக அமைச்சு உட்பட பல அரசாங்க நிறுவனங்களின் அனுபவங்களை இவர் தன்னகத்தே கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

Secretar Assum Duty P1

Secretar Assum Duty P2