பாதுகாப்புத் தரப்புக்கு அமைவாக, 2019 ஏப்பிறல் 21ஆம் திகதி நாட்டின் பல பாகங்களில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் புதிய வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

The Minister of Science, Technology and Research Sujeewa Senasinghe, during his visit to Geneva on 17 May 2019, extended an invitation to the European Organization for Nuclear Research (CERN) to participate in the Shilpa Sena exposition to be launched in July 2019 in Colombo.

விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய ஆராய்ச்சி பேரவை (NRC) இலங்கையில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு வலுவூட்டுவதற்கு அரசாங்க நிதியுதவி அளிக்கின்ற ஒரு முன்னணி நிறுவனமாகும். இது 1999ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டதோடு, 2019 மே மாதம் அதன் 20 ஆண்டுகால சேவையைப் பூர்த்திசெய்கிறது.

விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் தனது தூதுக்குழுவினருடன் சுவிட்சர்லாந்து, ஜெனீவாவில் உள்ள விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திற்கான ஆணைக்குழுவின் (CSTD) 22வது கூட்டத் தொடரில் தற்பொழுது கலந்துகொள்கின்றார். இந்த அமர்வு 2019 மே மாதம் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர், சுஜீவ சேனசிங்க அவர்கள் 2019 ஏப்பிறல் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் மசாசுசெட்ஸ், கேம்பிறிஜ் நகரில் உள்ள ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அபிவிருத்திக்கான நிலையத்தின் (CID) அனுசரணையில் நடைபெற்ற 11வது ஆண்டுநிறைவு உலக வலுவூட்டல் கூட்டத்தில் (GEM 19) கலந்து கொள்ளுவதற்காக நான்காவது முறையாகவும் அழைப்பட்டிருந்தார்.