திறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க கௌரவ அமைச்சர் டாக்டர் (திருமதி) சீதா அரம்பேபொல, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகள் துறையில் நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவகமான நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் சி கிளார்க் நிறுவகத்திற்கு அவதானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அவருடைய விஜயத்தின்போது, அமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் அமைப்பு ரீதியான பிரச்சினைகள் என்பவற்றைப் பற்றி அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடலை நடத்தினார். அங்கு உரையாற்றிய அமைச்சர், எமது விஞ்ஞானிகளின் பங்களிப்பு மகத்தானது எனவும், நன்மைகளைப் பெறும்பொருட்டு ஆராய்ச்சி நிறுவகம் முகாமைப்படுத்தப்பட வேண்டியதோடு சிறந்தமுறையில் இணைப்பாக்கம் செய்யப்படவும் வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இதற்கு தலைமை வகிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலதிக புகைப்படங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும் >>