STR அபிவிருத்திகளைப் பலப்படுத்துவதற்கு அமைச்சுக்கும் அதன் நிறுவகங்களுக்கும் 2017ஆம் ஆண்டின் அரசாங்க பண ஒதுக்கீடு காட்டப்படுகிறது.
  • நாட்டின் பிரதான பிரச்சனைகளில் ஒன்றான CKDu மற்றும் ஏனைய NCDs என்பவற்றில் ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு வசதிப்படுத்துவதற்கு தேசிய விஞ்ஞான மன்றத்திற்கு (NSF) பண ஒதுக்கீடு - ரூ. 100 மில்லியன்
  • வர்த்தகமயப்படுத்துவதற்கு உதவியாக இருந்ததினை நோக்கமாகக்கொண்டு குறிப்பாக அவசியமான இறுதிகட்டத்தில் நிதியிடல் புத்தாக்க இயக்க நிதியத்தைத் தொடர்தல். ஒதுக்கீடு - ரூ. 100 மில்லியன்
  • உயிர்தொழில்நுட்ப புத்தாக்க பூங்காவை ஸ்தாபித்தல். இது பிரதானமாக மருந்தாக்க கைத்தொழில், மரபணு பொருள் போன்றவற்றில் ஈடுபடுகின்ற கம்பனிகளுக்கு வசதிகளை வழங்கும். இதற்கு அரச தனியார் பங்குடமை (PPP) அடிப்படையில் விஞ்ஞான தொழில்நுட்ப புத்தாக்கத்திற்கான இணைப்பு செயலகம் (COSTI) முன்னணிவகித்து செயற்படும். அரசாங்கம் காணி மற்றும் மின்சாரம், நீர் போன்ற பாவனைப்பொருட்களை ஒதுக்கீடுசெய்யும். ஒதுக்கீடு - ரூ. 100 மில்லியன்
  • ரோபோ விஞ்ஞான பயன்பாடுகளுக்கு (CERA) அதிசிறந்த நிலையத்தின் வேலைகளை மேலும் பலப்படுத்துதல். இந்த நிலையததிற்கு ஒதுக்கீடு - ரூ. 50 மில்லியன்
  • இலங்கை நெனோ தொழில்நுட்ப (SLINTEC) நிறுவகத்திற்கு பண ஒதுக்கீடு - ரூ. 1150 மில்லியன்
  • கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தில் மருந்தாக்க ஆய்வுகூடங்களை விரிவுபடுத்துவதற்கு பண ஒதுக்கீடு - ரூ. 150 மில்லியன்
  • 5 பில்லியன் ரூபா ஆரம்ப மூலதனத்துடன் நிதியம் ஒன்று ஸ்தாபிக்கபட்டுள்ளது. இந்த நிதியத்தின் மூலம் உற்பத்தி வடிவமைப்பு பொறியியலில் (PDE) ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு உதவுவதற்கு பிணையாளர்களுடன் சேர்த்து கடன் வழங்குதல். ஒதுக்கீடு - ரூ. 500 மில்லியன்
  • அறிவகங்களுடன் கூட்டிணைந்து 5 மாவட்டங்களில் அடைகாப்பு நிலையங்களை ஸ்தாபித்தல். அதன் பின்னர் தொழிலை ஆரம்பிக்கின்றவர்களுக்கு உதவுவதற்காக 2020ஆம் ஆண்டளவில் 25 மாவட்டங்களுக்கு அரச தனியார் பங்குடமை (PPP) அடிப்படையில் விரிவாக்குதல். ஒதுக்கீடு - ரூ. 100 மில்லியன்