திறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் அமைச்சர் டாக்டர் சீத்தா அரம்பேபொல இன்று (24.08.2020) கொவிட் 19 வைரசினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மார்பு அழுத்த இயந்திரத்தை இன்று (24.08.2020) பார்வையிட்டார். இந்த இயந்திரம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட இறுதி வருட மாணவன் திரு. டில்சான் அபேவர்தனவினால் வடிவமைக்கப்பட்டு அமைச்சரின் மேற்பார்வைக்கு கொண்டுவரப்பட்டது.

கொவிட் 19 வைரஸ் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த அண்மைக் காலப்பகுதியில் அதன் கட்டுப்பாடு, ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை என்பவற்றிற்காக நாட்டில் சுமார் 780 புத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்னர் இந்த MCPR இயந்திரத்திற்கு ஆக்கவுரிமை பெற்றுக்கொண்டதன் பின்னர் இந்த விடயத்தை திரு. டில்சான் அபேவர்தன டாக்டர் சீத்தா அரம்பேபொல அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். திருமதி அரம்பேபொல இந்த இயந்திரத்தில் மேம்படுத்த வேண்டிய சில விசேட அம்சங்களை சுட்டிக்காட்டினார். அதற்கு அமைவாக தேசிய மருந்தாக்கற் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை (NMRA) மற்றும் கொழும்பு மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள் குழாம் ஆகியோர் கூட்ணைந்து இந்த இயந்திரம் மேம்படுத்தப்பட்டது. தற்பொழுது TOS லங்கா நிறுவனத்தின் கூட்டிணைவுடன் இந்த இயந்திரம் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புத்தாக்கத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் மேம்படுத்தப்பட்ட MCPR இயந்திரத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

இத்தகைய இயந்திரமொன்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு சுமார் ரூ. 48 இலட்சம் செலவாகும் எனவும் இந்த இயந்திரத்தை ரூ. 2.5 மில்லியனுக்கு இலங்கையில் தயாரிக்க முடியம் எனவும் திரு. டில்சான் அபேவர்தன தெரிவித்தார். மேலும் இந்த பெறுமதி மிக்க வணிக இயந்திரத்தை உருவாக்குவதற்கு டாக்டர் சீத்தா அரம்பேபொல அவர்கள் வழங்கிய ஊக்கமும் புத்தாக்கத் திறமையும் தனக்கு பெரும் உதவியாக அமைந்தது என அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரை நிகழ்த்திய அமைச்சர் இந்த இயந்திரத்தின் விருத்தியைப் பாராட்டியதோடு, தற்போதைய அரசாங்கம் எதிர்காலத்தில் இத்தகைய புத்தாக்கங்களுக்கு தொடர்ச்சியாக தேவையான ஒத்துழைப்பை நல்கி வழிகாட்டும் எனவும் தெரிவித்தார்.

001 002 004