தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு. திலங்க சுமதிபால, தானியங்கி இயந்திர பயன்பாட்டுக்கான அதிசிறந்த நிலையத்தை (CERA) உயர் தொழில்நுட்ப நிலையமாக வெற்றிகரமாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்வதில் தான் நேரடியாகத் தலையிடுவதாகக் கூறினார். தற்போதைய அரசாங்கத்தில் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கௌரவ இராஜாங்க அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் இயங்குகின்ற மேற் குறிப்பிட்ட நிலையத்திற்கு விஜயம்செய்தபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் விபரிக்கும்போது,

"இந்த நிறுவகம் பல வருடங்களுக்கு முன்னர் அரச - தனியார் பங்காண்மை கருத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இப்பொழுத அது இயங்காத நிலையில் இருக்கிறது. அதிமேதகு சனாதிபதி இந்த நிறுவகத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இது முன்னைய அரசாங்க காலத்தில் பல்வேறு அமைச்சுகளின் கீழ் இயங்கியது. இப்பொழுது எமது அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் இயங்குகிறது.

அடுத்து வரும் இரண்டு வருடங்களில் இந்த நிலையத்தை தானியங்கி இயந்திர பயன்பாட்டுக்கான அதிசிறந்த நிலையமாக்குவதற்கு எம்மால் இயலுமான அனைத்தையும் மேற்கொள்ளுவோம். இது எங்கள் கைத்தொழிலில் உயர் உற்பத்தி கொள்ளளவைப் பெறுவதை உறுதிப்படுத்தும். இந்த தானியங்கி இயந்திர பயன்பாடு உற்பத்தி விலையைக் குறைப்பது மற்றும் உற்பத்தி நடவடிக்கையின் வினைத்திறனை அதிகரிப்பதன் மூலம் உள்ளூர் உற்பத்தியை நேர்த்தியாகப் பூர்த்திசெய்தல் என்பவற்றின் மூலம் கைத்தொழிலுக்கு பெரிதும் நன்மையளிக்கும். இதை பரீட்சார்த்த நிலையாமாக மாற்றுவது எமது நோக்கமாகும். இந்த நிலையத்தின் அபிவிருத்தியில் நான் தனிப்பட்ட முறையில் தலையிடுவேன். எதிர்கால சுபீட்சத்திற்கு சிறந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் இந்த நிலையத்தின் மீது முதலீடு செய்ய வேண்டியுள்ளது."

இந்த தானியங்கி இயந்திர பயன்பாட்டுக்கான அதிசிறந்த நிலையத்தை பரீட்சார்த்த நிலையமாக மாற்றுவதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினரின் பிள்ளைகளுக்கு இந்த தொழில்நுட்பத்தை சுற்றி கூடுவதற்கு சந்தர்ப்பம் கிட்டுவதோடு, இளைஞர்களுக்கு அவர்களின் அறிவை விருத்திசெய்துகொள்ள முடியும். மேலும் பாரிய உற்பத்தி கொள்ளவை எதிர்பார்க்கின்ற கைத்தொழிலாளார்களுக்கு அவர்களை அடுத்த தொழில்நுட்ப கட்டத்திற்கு உயர்த்துவதற்கு ஒரு மேடை உருவாக்கிக் கொடுக்கப்படும். அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. சமன் பெரேரா, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இணைப்பாக்க செயலகத்தின் அலுவலர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

503A2913503A2905503A2893503A2871