தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் வெட்டுமரக் குற்றிகளை வடிவமைக்கும் புத்தாக்க நிலையத்தையும் (TDIC) வெட்டுமரக் குற்றிகளைப் பதனிடும் புத்தாக்க நிலையத்தையும் (TPIC) ஸ்தாபிக்கும் பணிகளைத் துரிதப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இலங்கை வெட்டுமர கைத்தொழிலுக்கு பெறுமதி சேர்க்கும் முன்னெடுப்பாக இது அமைவதோடு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மீது இது அமுலாக்கப்படுகிறது.

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் (COSTI) கீழ் இயங்குகின்ற விஞ்ஞானத்திற்கான இணைப்பாக்க செயலகம் மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் என்பவற்றுடன் கூட்டிணைந்து இந்த இரண்டு வெட்டுமர புத்தாக்க நிலையங்களை அமைக்கும் பணிகளை ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த இரண்டு புத்தாக்க நிலையங்களும் இயங்கத் தொடங்கியவுடன், எதிர்காலத்தில் முழுமையாக வளரும் வெட்டுமர புத்தாக்க நிலையங்களாக உலக ஏற்றுமதி சந்தைக்கு வெட்டுமரத்தை அடிப்படையாகக் கொண்ட புத்தாக்க வடிவங்களை அறிமுகப்படுத்துவதற்கு இந்த நாட்டுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும்.

இந்த நிலையங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதன் ஊடாக மொறட்டுவ பிரதேசத்தை அதி சிறந்த மர உற்பத்திகளை வடிவமைக்கும் பிராந்தியமாக ஸ்தாபித்தல், இலங்கையில் சிறிய வெட்டுமர உற்பத்தியாளர்களை மீள சீர்படுத்துதல் மற்றும் உயர்த்துதல், பயிற்சி, அறிவு மற்றும் தொழில் நுட்பத்திற்கு மாறுதல் என்பவற்றின் ஊடாக ஆற்றல் விருத்தி, இலங்கை வெட்டுமர வடிவமைப்புக்காக அடையாளம் காணப்பட்ட சிறந்த வணிகப் பெயரை உருவாக்கி வெட்டுமர கைத்தொழிலில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை புலமைச் சொத்து ஊடாகப் பாதுகாத்தல், இலங்கை வெட்டுமரம் மற்றும் வெட்டு மரங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளுக்கான எற்றுமதி சந்தை வாய்ப்புகளை உயர்ந்த தரத்திற்கு மேம்படுத்துதல், போன்ற நீண்ட கால பெறுபேறுகளை அமைச்சு எதிர்பார்க்கிறது. வெட்டுமரம் மற்றும் வெட்டு மரங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளுக்கான மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்தல், பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு புத்தாக்க வெட்டுமர உற்பத்தியை அதிகரித்தல் போன்ற நீண்ட கால பெறுபேறுகளை அடைய அமைச்சு எதிர்பார்க்கிறது.

இந்த கருத்திட்டத்தின் வெற்றிகரமான அமுலாக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் (COSTI) கீழ் இயங்குகின்ற விஞ்ஞானத்திற்கான இணைப்பாக்க செயலகம் மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கிடையில் முத்தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது. அமைச்சின் செயற்பாட்டு திட்டத்தில் வெட்டுமரக் குற்றிகளை வடிவமைக்கும் புத்தாக்க நிலையம் (TDIC) வெட்டுமரக் குற்றிகளைப் பதனிடும் புத்தாக்க நிலையம் (TPIC) என்பவற்றின் கீழ் அடையாளம் காணப்பட்ட சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு குறித்த பல்கலைக்கழகங்களுக்கு நிதியம் வழங்கப்பட்டுள்ளது.

வெட்டுமரக் குற்றிகளை வடிவமைக்கும் புத்தாக்க நிலையத்தின் (TDIC) கீழ் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெட்டுமரக் குற்றிகளைப் பதனிடும் புத்தாக்கம் பற்றி 4 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் அனைத்து மட்டத்திலுமான வெட்டுமர கைத்தொழிலாளர்களுக்கான இணையவழி மேடையொன்றை அமைப்பதற்குத் தயாராக இருக்கிறது.

இந்த முன்னெடுப்புடன் இணைந்ததாக சர்வதேச வெட்டுமர அமைப்பின் (ITTO) அங்கத்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ளுவதற்கு இலங்கைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

503A8419Project map