உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய விஞ்ஞான மன்றத்தினால் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மன்றத்தின் வருடாந்த விருது வழங்கும் விழா 2019ஆம் டிசம்பர் 18ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கௌரவ அமைச்சர் திரு. பந்துல குணவர்தன மற்றும் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கௌரவ அமைச்சர் திரு. திலங்க சுமதிபால ஆகியோரின் பங்கேற்பில் நடைபெற்றது. தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நிதியுதவி அளிக்கப்பட்டு விஞ்ஞான முன்னேற்றத்திற்காக ஆராய்ச்சி செய்கின்ற தனித்துவமான ஆராய்ச்சியாளர்களைப் பாராட்டுவதையும் ஆராய்ச்சி மானியங்கள் பெறுகின்றவர்கள் விஞ்ஞான ஆராய்ச்சியில் தொடர்ச்சியாக உயர் தரத்தைப் பேணுவதற்கு செயலூக்கமளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த விருது வழங்கும் விழா வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்றது.

பிரதானமாக நான்கு வகைகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஆராய்ச்சி விருதுகள், தேசிய விஞ்ஞான மன்றத்தின் தொழில்நுட்ப விருதுகள், உலக விஞ்ஞான கல்வி நிறுவகத்தினால் வழங்கப்படுகின்ற இளம் விஞ்ஞானி விருது மற்றும் தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்பு மேற்பார்வை திட்டத்திற்கான உதவி ஆகிய  திட்டங்களின் கீழ் மொத்தமாக 26 ஆராய்ச்சி கருத்திட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஆராய்ச்சி விருதுகள் வகையின் கீழ்,  பொறியியல் துறை, சுகாதார விஞ்ஞானம், உயிரியல் தொழில்நுட்பம், தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நிதியுதவி அளிக்கப்படுகின்ற அடிப்படை விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் உயிர் பல்வகைமை கருத்திட்டங்கள் ஆகியவற்றிற்கு ஐந்து விருதுகள் வழங்கப்பட்டன. புத்தாக்க நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் தொழில்நுட்ப மானியம் பெறுபவர்களின் பங்களிப்பை மதிப்பதற்காக தொழில்நுட்ப விருதுகள் வகையின் கீழ் உள்ள கருத்திட்டங்களில் வெற்றிகரமான ஒரு கருத்திட்டத்திற்கு சாதனை விருது வழங்கப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் கலாநிதி ரனில் ஜயவர்தனவுக்கு உயிரியல், இரசாயனம், கணிதம் மற்றம் பௌதிகவியல் ஆகிய துறைகளில் அதிசிறந்த திறமைகளைக் காட்டிய இளம் விஞ்ஞானிகளுக்காக தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் உலக விஞ்ஞான கல்வி நிறுவகம் என்பவற்றினால் வழங்கப்பட்ட இளம் விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டது. பட்டப்பின்படிப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு பல்கலைக் கழகங்களையும் ஆராய்ச்சி நிறுவகங்களையும் ஊக்குவிப்பதையும் செயலூக்கப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு மேற்பார்வையாளர்கள் குழாத்திடமிருந்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பட்டப்பின்படிப்பு மாணவர்களை மேற்பார்வைசெய்த விஞ்ஞானிகள்கல்விமான்கள் 12 விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

விருது வழங்கும் விழாவில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மலிக் ரனசிங்க "ஆராய்ச்சியின் இலாபங்கள்" என்ற தலைப்பில் பிரதான உரையை நிகழ்த்தினார். கூட்டத்தில் உரை நிகழ்த்திய கௌரவ அமைச்சர் திரு. பந்துல குணவர்தன: 'அதிமேதகு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் ஆராய்ச்சிக்காக மொத்த தேசிய உற்பத்தியிலிருந்து அதிக நிதியத்தை ஒதுக்க வேண்டும் என்ற கருத்தைக்கொண்டுள்ளது எனவும், நாட்டின் அபிவிருத்திக்கு மனித வள அபிவிருத்தி பெரிதும் நன்மை பயக்கும் என தனது அனுபவத்தைக் கொண்டு நம்புவதாகவும். புதிய தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் புத்தாக்க சிந்தனைகள் மூலம் நாட்டை அபிவிருத்திசெய்யவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் முடியும் எனவும், அதனால் குறுகிய காலத்தில் அரசாங்கத்திற்குக் கிடைக்கக்கூடிய வளங்களைக்  கொண்டு விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் என்பவற்றிற்கு முன்னுரிமையளித்து எதிர்கால அபிவிருத்தியை ஆராய்ச்சி செய்யும். விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தமது கண்டுபிடிப்பு முடிவுகளை சந்தைப்படுத்த வேண்டும் எனவும் அதன் மூலம் எமது வளங்களுக்கு அதிக பெறுமதியைக் கூட்டுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்' எனவும் கூறினார்.

கௌரவ அமைச்சர் திரு. சுமதிபால உரையாற்றும்போது: "எமது நாட்டில் அரசாங்கத்தின் பக்கத்தில் ஆராய்ச்சிக்கு கவனம் செலுத்துவது குறைவாக இருக்கிறது. எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம் முதல் முறையாக தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்திற்கான தனியான அமைச்சு ஒன்றை ஸ்தாபித்துள்ளது. தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க திறனுடன் நாட்டை சிறந்த அபிவிருத்தியுள்ள நாடாக மாற்றுவதற்குத் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நோக்கத்திற்கு அமைவாக இருந்தது. அரசியல் சார்பற்ற தலையீட்டின் ஊடாக முதல் முறையாக அரச தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றார். நமது நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு எங்களுக்கு உதவக்கூடிய பிரதான காரணிகளை நாங்கள் அடையாளம் காண வேண்டும். தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சு தொழில்சார்ந்த அணுகுமுறையின் ஊடாக விஞ்ஞானிகளை ஆகக்கூடியளவில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் ஊடாக இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதற்கு நாம் அரசாங்கத்தை சம்மதிக்கச் செய்ய வேண்டும்.' எனக் குறிப்பிட்டார். கௌரவ அமைச்சர் திரு. சுமதிபால உரையாற்றும்போது: 'எமது நாட்டில் அரசாங்கத்தின் பக்கத்தில் ஆராய்ச்சிக்கு கவனம் செலுத்துவது குறைவாக இருக்கிறது. எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம் முதல் முறையாக தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்திற்கான தனியான அமைச்சு ஒன்றை ஸ்தாபித்துள்ளது. தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க திறனுடன் நாட்டை சிறந்த அபிவிருத்தியுள்ள நாடாக மாற்றுவதற்குத் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நோக்கத்திற்கு அமைவாக இருந்தது. அரசியல் சார்பற்ற தலையீட்டின் ஊடாக முதல் முறையாக அரச தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றார். நமது நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு எங்களுக்கு உதவக்கூடிய பிரதான காரணிகளை நாங்கள் அடையாளம் காண வேண்டும். தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சு தொழில்சார்ந்த அணுகுமுறையின் ஊடாக விஞ்ஞானிகளை ஆகக்கூடியளவில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் ஊடாக இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதற்கு நாம் அரசாங்கத்தை சம்மதிக்கச் செய்ய வேண்டும்." எனக் குறிப்பிட்டார். 

உயர் கல்வி, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் திரு. அநுர திசாநாயக்க, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக எஸ். லொகுஹெட்டி, தேசிய விஞ்ஞான மன்றத்தின் பதிற் கடமையாற்றும் தலைவி திருமதி. நந்தனி சமரவிக்கிரம, தேசிய விஞ்ஞான மன்றத்தின் பணிப்பாளர் நாயகம்  பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன ஆகியோர் உட்பட கௌரவ அழைப்பாளர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1