விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் தேசிய ஆராய்ச்சி பேரவையினால் (NRC) ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான வெளியீடுகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கும் விழா 2011.09.26 அன்று கொழும்பு தாஜ் சமுத்திர ஹோட்டலில் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுஜீவ சேனசிங்க அவர்களின் பங்றே;புடன் நடைபெற்றது.

விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதற்குப் பங்களிப்புச் செய்கின்ற விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்குகிற ஆராய்ச்சி துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்த தேசிய ஆராய்ச்சி பேரவை விளங்குகின்றது. இந்த ஆராய்ச்சி உதவி உயர்தர ஆராய்ச்சியில் ஈடுபடுகின்ற ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு ஆராய்ச்சிகளை நடத்துகிற அரசாங்க மற்றும் தனியார்துறை என்பவற்றிற்கிடையில் கூட்டு முயற்சி வடிவில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பில் பேருரையாற்றுகின்ற பல் ஒழுங்கு ஆராய்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு தேசிய ஆராய்ச்சி பேரவை நிதி உதவியை வழங்குகின்றது.

விஞ்ஞானிகள் உயர்தர ஆராய்ச்சியை மேற்கொள்ளுவதை ஊக்குவிப்பதற்காக அவர்களின் விஞ்ஞான வெளியீடுகளுக்காக ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வை தேசிய ஆராய்ச்சி பேரவை முன்னெடுத்தது. 2019ஆம் ஆண்டு 12வது விருது வழங்கும் விழாவில் மருத்துவம், விவசாயம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் 240க்கு மேற்பட்ட ஆராய்சியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழாவில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக லொகுஹெட்டி, தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் பேராசிரியர் ஜானக த சில்வா மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி திருமதி மனீஷh ராஜபக்ஷ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

NRC Presi awards1 NRC Presi awards11 NRC Presi awards12