நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் சி கிளார்க் நிலையத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் பெறுபேறாக, இலங்கை விஞ்ஞானிகள் குழாம் ஒன்று இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஒரு புதிய மேலதிக- சூரிய கோள்மண்டல முறைமையைக் (நுஒழிடயநெவள) கண்டுபிடித்துள்ளது.

ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் வான்பொருளியக்க அளவியல் ஆராய்ச்சி பிரிவின் பிராதான ஆராய்ச்சியாளரான திரு. சராஜ் குணசேகர 2017ஆம் ஆண்டு மேலதிக கோள்களைத் தேடுவதற்கான ஆராய்ச்சியை ஆரம்பித்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு, 27 வயதுடைய மகேஷ; ஹேரத் இந்த ஆராய்ச்சி கருத்திட்டத்தில் பங்கெடுப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவகத்தில் இணைந்துகொண்டார். அன்றிலிருந்து அவர் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் செயற்படுகிறார்.

மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கியைக் கொண்டுள்ள விண்வெளிக் கலமான நாஸா கெப்லர்Æகே 2 (Nயுளுயு முநிடநசஃமு2) செயற்பணி, 2009ஆம் ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளில் 588,991 நட்சத்திரங்களை அவதானித்துள்ளதுடன், நாஸா அந்த தரவுகளை பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளது. இந்த ஆயிரக்கணக்கான தரவு தொகுதிகளை அவதானிப்பதற்காக, இந்த தரவுகளின் ஊடாக ஆய்வுசெய்வதற்கு ஹேரத் அவர்களால் ஒரு விதிமுறை விருத்திசெய்யப்பட்டது. கெப்லர்Æகே 2 (Nயுளுயு முநிடநசஃமு2) செயற்பணியின் பிரசார நடவடிக்கை 6 இன் போது அவதானிக்கப்பட்ட நுPஐஊ 212737443 என்ற வகையில் வடிவமைக்கப்பட்ட நட்சத்திரத்தைப்பற்றி மேலும் ஆராய்வதற்கு 2018ஆம் ஆண்டு இலங்கை விஞ்ஞானிகள் குழாம் தீர்மானித்தது. இந்த ஆராய்ச்சியின்போது கோள்மண்டல பாதையில் இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்படாத இரண்டு நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 விஞ்ஞானிகள் இந்த நட்சத்திரங்களைப் பற்றியும் கோள்மண்டல அம்சங்களைப் பற்றியும் பல்வேறு கோணங்களில் ஆராய்வதற்கு இந்த முறைமையை மேலும் ஆராய்ச்சிசெய்வதற்காக இந்த கருத்திட்டத்தில் பங்கேற்பதற்கு உடன்பட்டனர். தற்பொழுது திரு ஹேரத் தனது ஆPhடை பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்வதற்கு கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்படுகிறார்.

இந்த ஆராய்ச்சி செயற்பாட்டின் முடிவுகள் 200 வருடங்கள் பழமைவாய்ந்த சஞ்சிகையான றோயல் விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் மாதாந்த அறிவித்தல் (ஆNசுயுளு) என்ற சஞ்சிகையில் வெளியிடுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தில் முன்னணி வானிலை ஆராய்ச்சி மற்றும் விண்வெளி விஞ்ஞான சஞ்சிகையாகத் திகழ்கிறது. இந்த கட்டுரை 2019ஆம் ஆண்டு யூலை மாதம் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இதை புதிய கோளாக ஏற்றுக்கொண்ட ஏனையோருக்கிடையில் NயுளுயுஃதுPடு மற்றும் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவகம், புனித அன்றூ பல்கலைக்கழகம் என்பவையும் அடங்குகின்றன. மேலதிக கோள்மண்டல கலைக்களஞ்சியம், வில்கிபீடியா என்பவற்றுடன் சேர்த்து நாஸா மேலதி கோள்மண்டல சுவடிகள் காப்பகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் இணையவழியில் கிடைக்கின்றன.

இந்த இரண்டு கோள்களும் முறையே 13 மற்றும் 65 என்ற கோள்வழி காலத்தைக் கொண்டுள்ளன. இவற்றில் 50 நாட்களுக்கு மேற்பட்ட கோள்வழி காலத்தைக் கொண்டுள்ள முநிடநச பணித்திட்டத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட சில கோள்களில் இரண்டாவது கோள் அடங்குகின்றது. முதலாவது கோள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் 1Æ10வது தூரத்திலும் இரண்டாவது கோள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் 1Æ3வது தூரத்திலும் இருக்கின்றது. இந்த நட்சத்திரம் எமது சூரியனின் 2Æ3 விட்டதையும் திரளையும் கொண்டுள்ளது. மேலும் இந்த வகை நட்சத்திரம் 'செம்மஞ்சல் குள்ளன்' ('ழுசயபெந னறயசக') எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்த நட்சத்திரத்தை கன்னிராசி விண்மீனுக்கு அருகில் காண முடியும். மேலும் அது எமது சூரிய குடும்பத்திலிருந்து 1133 ஒளி வருட தூரத்தில் இருக்கின்றது. இந்த நட்சத்திரம் எமது சூரியனைவிட குளிராக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எமது சூரியனின் வெப்பநிலையான 5800 வெப்ப அளவீட்டு அலகுடன் ஒப்பிடுகையில் இது 4700 வெப்ப அளவீட்டு அலகைக் கொண்டுள்ளது.

இந்த இரண்டு கோள் மண்டலங்களில் சிறியது மு2-310டி எனப் பெயரிடப்பட்டுள்ளது. 16,500 கிமீ விட்டத்துடன் 263 பாகை சென்ரிகிரேட் சமநிலை வெப்பநிலையைக் கொண்டுள்ளது. (பூமியின் விட்டத்தில் 2.6 மடங்கு) அதே நேரத்தில் இரண்டாவது பெரிய கோள் மண்டலம் 17,220 கிமீ விட்டத்துடன் 42 பாகை சென்ரிகிரேட் சமநிலை வெப்பநிலையைக் கொண்டுள்ளது. (பூமியின் விட்டத்தில் 2.7 மடங்கு) இதன் கருத்து இந்த இரண்டு கோள்மண்டலங்களும் துணை-நெப்ரியூன் கோள்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை பூமிக்கும் நெப்ரியுனுக்கும் இடையில் உள்ள அளவைக் கொண்டுள்ளன. இந்த கோள் மண்டலங்கள் எமது பூமியைவிட கனதியான வாயு மண்டல அளவைக் கொண்டுள்ளதோடு நீரகவாயு, பரிதியம் உட்பட அநேகமாக அமோனியா நீராவி ஆகிய ஆக்கக்கூறுகளையும் கொண்டுள்ளது. இந்த கோள் மண்டலங்களின் அளவைப் பொறுத்தவரையில் இவை பாறை அல்லது வாயுவைக் கொண்டுள்ளனவா என்பதில் நிச்சயமில்லை. ஏனென்றால் இவை ஏற்றுக்கொள்ளப்பட்ட பாறை மற்றும் வாயு அளவைக் கொண்டிருப்பதைக் கொண்டு இவை நிச்சயமற்றவையாக இருக்கின்றன. பொதுவாக கோள் மண்டலங்கள் உட்புறத்தில பாறைகளையும் மேற்பரப்பில் கனதியான வாயுவையும் கொண்டிருக்க வேண்டும். புள்ளிவிபர மற்றும் நடைமுறை அனுபவம் சார்ந்த முறைகளைப் பயன்படுத்தி பூமியின் திரளில் 9.4 மடங்கு அண்ணளவாக சமமாக இருப்பது ஆராயப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த கோள் மண்டலங்களின் திரள், உள்ளடக்கம், வாயுமண்டல அடங்கல்கள் என்பவற்றைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கு மேலும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இந்த கோள்மண்டலங்கள் நட்சத்திரத்திற்கு அண்மித்திருப்பதற்கு அமைவாக, இவை 'ஏற்ற இறக்க அதிர்வெண் நிலையில்' ( வுனையட டுழஉமiபெ) இருப்பதற்கு சாத்தியம் உண்டு. இது கோள் விண்வெளிப் பாதையில் சுழலும்போது அதன் விண்வெளி காலத்திற்கு சமமாக இடம்பெறுகிறது. இதன் கருத்து கோள் மண்டலத்தின் ஒரு பக்கம் மாத்திரம் நடசத்திரத்தைப் பார்க்கிறது. ஏற்ற இறக்க அதிர்வெண் நிலைக்கு உதாரணம் எமது சந்திரனாகும்.

இலங்கை விஞ்ஞானிகளின் தலைமையில் மேலதிக கோள்மண்டல முறைமை கண்டுபிடிக்கப்பட்டமை எமது நாட்டின் விஞ்ஞான ஆராய்ச்சியில் மாபெரும் பாய்ச்சலாகும். அத்துடன் இது எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு அவர்களின் பணியைத் தொடர்வதற்கு வழியமைக்கிறது. இந்த வருடத்தில் மேலதிக கோள்மண்டலங்களைக் கண்டுபிடித்த அபிவிருத்தியடைந்த நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, கனடா, மேற்கு ஐரோப்பிய, வட ஐரோப்பிய மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுடன்; இலங்கையும் சேர்ந்துகொள்ளுகின்றது.

new planetary system3new planetary system1