விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய ஆராய்ச்சி பேரவை (NRC) இலங்கையில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு வலுவூட்டுவதற்கு அரசாங்க நிதியுதவி அளிக்கின்ற ஒரு முன்னணி நிறுவனமாகும். இது 1999ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டதோடு, 2019 மே மாதம் அதன் 20 ஆண்டுகால சேவையைப் பூர்த்திசெய்கிறது.

விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக் எஸ். லொகுஹெட்டி அவர்களின் பங்கேற்பில் தேசிய ஆராய்ச்சி பேரவையின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையும் முதல் நாள் உறையும் வெளியிடப்பட்டது. இந்த வைபவம் இலங்கை கட்டிட பொறியியலாளர்கள் நிறுவகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.