விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர், சுஜீவ சேனசிங்க அவர்கள் 2019 ஏப்பிறல் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் மசாசுசெட்ஸ், கேம்பிறிஜ் நகரில் உள்ள ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அபிவிருத்திக்கான நிலையத்தின் (CID) அனுசரணையில் நடைபெற்ற 11வது ஆண்டுநிறைவு உலக வலுவூட்டல் கூட்டத்தில் (GEM 19) கலந்து கொள்ளுவதற்காக நான்காவது முறையாகவும் அழைப்பட்டிருந்தார்.

இந்த நவீன நிகழ்ச்சித்திட்டம் 100 முன்னணி சர்வதேச கொள்கை தயாரிப்பாளர்கள், பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர்கள், மன்றங்களின் பிரதானிகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகள் மற்றும் அபிவிருத்தி நிபுணர்கள் சந்திக்கின்ற மேடையாக அமைந்திருந்தது. அத்துடன் நிலபேறான சுபீட்சத்தை உருவாக்குவதற்கு கருத்துக்களையும் சாதனை படைக்கும் கண்டுபிடிப்புகளையும்; பகிர்ந்துகொள்ளுகின்ற மேடையாக அமைந்திருந்தது.

மேலும் இந்த மகாநாடு உலகளாவிய வலுவூட்டல் சந்திப்பு (GEM 19) என அழைக்கப்பட்டது. இது அபிவிருத்தி உலகை வடிவமைக்கின்ற சில உந்துசக்திகளை கண்டுபிடிக்கும் மகாநாடாக அமைந்திருந்தது. இங்கு, தற்போதைய அபிவிருத்தி நிலையை நாம் புரிந்துகொள்ளுவதற்கு அரச திறன் எப்படி எங்களுக்கு உதவி முடியும்? அரச செயற்பாடுகள், அரசியல் ஒழுங்குமுறை, கொள்கை முன்னுரிமை மற்றும் அதிகாரம் என்பவற்றின் மாற்றத்திற்கு செல்வாக்கு செலுத்துகின்ற காரணிகள் யாவை? நாட்டில் அரச திறனை மேம்படுத்துவதற்கு இருக்கும் மிகப் பெரிய சவால்கள் யாவை? மறுசீரமைப்பை முன்னெடுப்பதற்கு தற்பொழுதுள்ள அரச திறன்விருத்தி மற்றும் அரசியல் கட்டளைகளால் விதிக்கப்படுகின்ற தடைகளை கொள்கை தயாரிப்பாளர்கள் கையாள்வது எப்படி? போன்ற கேள்விகள் இங்கு ஆராயப்பட்டன.

முன்னணி பேச்சாளர்கள் மத்தியில் அரசியல் விஞ்ஞானியும் பேராசிரியரும் அதிகூடியளவில் விற்பனயாகும் நூல்களின் ஆசிரியருமான பிரான்சிஸ் புகுயாமா மற்றும்;, உலகளாவிய முரண்பாட்டு தீர்வுக்கும் ஆராய்ச்சிக்குமான பியர்சன் நிறுவகத்தின் பணிப்பாளரும் பொருளியல் பேராசியருமான ஜேம்ஸ் ரொபின்சன் ஆகியோர் இருந்தனர்.

அமைச்சர் சேனசிங்க அவர்கள் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான நிலையத்தின் (CID) சிறந்த தொடர்புகளைக் கொண்டிருந்தார். ஏற்கனவே 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற 'இன்றைய பொருளாதாரத்தில் செயற்படுதல் மற்றும் அதைப் புரிந்துகொள்ளுதல் என்ற கருத்தைக் கொண்ட: வர்த்தக கொள்கையில் திறமை பெறுதல்' என்ற தலைப்பிலான நிறைவேற்று கல்வி நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொபர்ட் ணு லோரன்ஸ் ஒழுங்குசெய்திருந்தார். 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளிலும் உலகளாவிய வலுவூட்டல் சந்திப்பு (GEM) கூட்டங்களில் கலந்துகொண்டார்.

11வது ஆண்டுநிறைவு உலக வலுவூட்டல் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டமை அபிவிருத்தியடையும் நாடு என்ற வகையில் இலங்கை அதன் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட முன்னெடுப்புகள் மீதான பொருளாதாரத்தை வடிவமைப்பதற்கு இலங்கைக்கு சார்பாக வலுவான சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்கும் விரிவான பரப்பெல்லையில் நிபுணத்துவத்தைப் பரிமாற்றிக்கொள்ளுவதற்கும் மிகச் சிறந்த சந்தர்ப்பமாக அமைந்திருந்தது.